தோழமையுடன்

Wednesday, December 19, 2012

அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி' - எஸ்.கிருஷ்ணகுமார்

 
கீற்று இனைய இதழில் திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (26 நவம்பர் 2012 ) எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி' 

வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய, மக்களின் எண்ண ஓட்டங்களுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொடர்பியல் துறையில் இருப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டிய பால பாடங்கள், மரபுகள் இருக்கின்றன. பொழுதுபோக்குவதற்காக என நேரத்தை ஒதுக்கி, பணத்தை செலவழித்து, உள்ளே வந்திருப்பவர்கள் மூளைக்குள் எதிர்மறை சிந்தனைகளை ஏற்றி அனுப்பாதிருக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. அதை, தப்பாக்கி விட்டது துப்பாக்கி! 

Sunday, December 16, 2012

கொத்தனாரின் நோட்டுசு - பா.ராகவன்


இலவசக் கொத்தனாரின் 'ஜாலியா தமிழ் இலக்கணம்' என்ற நூலுக்கு பா.ராகவன் எழுதியிருந்த இந்த புத்தக அறிமுகம் அதன் நோக்கம் சார்ந்து எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும், இந்த நூல் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலுடன் இதை மீள்பதிவு செய்துள்ளேன். சூட்டோடு சூடாக என் மகனை அலைபேசியில் அழைத்து எனக்கு ஒரு பிரதி வாங்கி வருமாறும் சொன்னேன். நீங்களும் வாங்கி பிள்ளைகளுக்கு பரிசளிக்கலாமே! 

Thursday, December 6, 2012

நிம்மதி அது உங்கள் Choice!

சிந்தனையின் கால்கள் மரக்கால்கள்.
மரக்கால்களின் நடை பலகீனமானது.
                           _ மௌலானா ரூமி (ரஹ்)

சிந்திக்க மாட்டீர்களா? உங்கள் உள்ளங்கள் பூட்டியா வைக்கப்பட்டுள்ளது? என்பது சிந்தனைக்கான இறைவேதத்தின் அழைப்பு.
 
சிந்தனை செய் மனமே! என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அருமையான உபதேசம். அதை விட அவசியம் எதை சிந்திப்பது என்பது!.

எதிரே மனைவி இருக்கும் போது அலுவலக சிந்தனை. அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டின் சிந்தனை.

இறைவனை முன்னோக்கி தொழுகையில் நின்றால் கூட பக்கத்தில் தொழுபவர் னிப்படி விரலை அசைக்கின்றார்?.  வாசலில் கழற்றி வைத்த புது செருப்பு பத்திரமாக இருக்குமா?. இந்த ஹஜ்ரத் ஏன் இவ்வளவு பெரிய சூரா ஓதுராரு?.

 இப்படி சிந்தனை…சிந்தனை….சிந்தனை ….எண்ணங்களின் இடை விடா கூக்குரல்.

இந்த சிந்தனை வழியே மனம்  பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையை முன்வைத்துமனதின் உள்ளே ஒரு வாய் சதா பேசிக் கொண்டே இருக்கின்றது கவனித்தீர்களா!” என்பார்கள் என் குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்)