தோழமையுடன்

Saturday, June 2, 2012

அன்பு சகோதரி அஸ்மாவுக்கு!

நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரி அஸ்மாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் கேட்டிருந்த  கேள்விக்கு எழுத ஆரம்பித்த பதில் சற்றே நீண்டு விட்டதால் தனி இடுகையாய் பதிந்து விட்டேன்.

முந்தைய காலத்தில் ராபியா பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா போன்ற மகத்தான பெண்மணிகள் மார்க்க சேவையாற்றியுள்ளார்கள். இந்நாளில் பெண்கள் மார்க்க சேவைக்கு வருவது எவ்வளவு மகத்தானது!. அந்த வகையில் உங்கள் மார்க்கப் பற்றும், சேவையையும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தாங்கள் புல்லாங்குழலுக்கு வருகை தந்ததற்கு கூடுதல் மகிழ்ச்சி! நன்றி!


இனி உங்கள் கேள்விக்கு வருவோம். 

அடிப்படையில் நீங்களும் நானும் வெவ்வேறு  School of thoughtsன் அடிப்படையில் குர்ஆன், ஹதீஸை விளங்கிக் கொண்டவர்கள்.

நம் அடிப்படைகளை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒப்பிட்டு சரிகாணாத வரை நம் விளக்கங்களில் உள்ள முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. 

 உதாரணத்திற்காக பாருங்கள்:


தூரத்தில் இருக்கும் அவ்லியாவிடம் கேட்கக் கூடாது. மரணத்தவர்களிடம் கேட்க கூடாது.
ஏனென்றால் அதில் அல்லாஹ்வை போல கேட்கும் தன்மையை, வல்லமையை அவ்லியாக்களுக்கு கற்பிக்கின்றோம். அதனால் இறைபண்புகளில் இணைவைப்பு நிகழ்கிறது என்பது உங்கள் தரப்பின் வாதம்.

உயிருள்ளவரோ, இறந்தவரோ யாராயிருந்தாலும் அவர் இறைவனின் சக்தியின்றி யாருக்கும் எந்த லாபத்தையும், நஷ்டத்தையும் கொடுக்க முடியும் அல்லது சிருஷ்டிகள் தன் தானே இறைவனின் சக்தியின்றி எந்த ஒரு வேலையையும் சிறிதளவேனும் செய்ய முடியும் என்று எண்ணுவது இறைநெருக்கத்தை விட்டு தூரமாக்கும் மறைமுகமான இணைவைப்பாகும் (ஷிர்கே கஃபி) என்பது எங்களுக்கு வலிமார்கள் சொல்லித் தந்த பாடம்.

எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் (ப.ர.P87) என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். ஏன் அப்படி கூறுகின்றார்கள்?.


உப்பின் தேவையையும் அல்லாஹ் தன்னிடமே கேட்கச் சொல்லுகின்றான். செருப்பு வார் அறுந்தால் கூட அல்லாஹ் தன்னிடமே கேட்க சொல்லுகின்றான் என விளக்கும் ஹதீஸை தாங்கள் சிந்தித்தித்து பாருங்கள் சகோதரி! சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ஏன் அப்படி கூறுகின்றார்கள் என்பது விளங்கும்.


நாம் இது வரை எவ்வாறு விளங்கி இருந்தாலும்  இறைவனைத் தவிர யாரும் லாபமோ, நஷ்டமோ அனுவளவும் பிறருக்கு செய்ய முடியாது என்பது நம் அனைவரின் பொதுவான நம்பிக்கை.


அதே நேரத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது நாமறிந்த இன்னொரு உண்மை.


துரும்பின் மூலம் பல்குத்தும் உதவியையும் செய்வது இறைவன் என்பது தவ்ஹீத் எனும் ஏகத்துவம். இந்த மகத்தான ஏகத்துவ உண்மையை அடையா விட்டால் மேற் கூறிய இரண்டில் ஒரு கூற்று பொய்யென்றாகி விடும்.


அதே நேரத்தில் சிருஷ்டியை இறைவன் என்றோ
இறைவனை சிருஷ்டி என்றோ சொல்வதல்ல தவ்ஹீது.ஆகவே, தவ்ஹீது என்றால் என்ன? ஷிர்க் என்றால் என்ன? என்பதில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியான வரையறை (Definition) அளவு கோள்கள்கள் (yard stick) அடைவதும்அவற்றில் முடிந்தவரை கருத்தொறுமை அடைய வேண்டியதும் நம் முதல் தேவை.


அப்படி செய்யாதவரை இது ஷிர்க், இது தவ்ஹீது எனபதில் அதிலும் குறிப்பாக ஷிர்கே கஃபி எனும் மறைமுகமான ஷிர்க்கின் விசயத்தில் கருத்து வேறுபாடு என்பது தவிர்க்கவே முடியாதது.


0000


அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் கூட உணவளிப்பவன் அல்லாஹ். சகல தேவைகளையும் நிறைவேற்றித் தருபவன் அல்லாஹ் என்பது தானே நம் ஈமான்.

நமது அற்ப தேவையையும் நிறைவேற்றும் தகுதி அல்லாஹ்வை தவிர யாருக்கும் இல்லை. இந்த விதமாக அல்லாஹ்வை விளங்கிக் கொள்ள வேண்டியது மார்க்கத்தில் நமது அடிப்படை தேவை.

அதை தெளிவாக தெரிந்து கொள்ளும் முறையென்ன?

 “ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்கிறது இறைவேதம்.

அறிந்தவர்கள் யார்?குர்ஆனும், ஹதீஸும் இருக்க இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள அந்த விளக்கத்தை வைத்திருக்கும் ஒருவரை அணுக சொல்லி இறைவனே உத்தரவிடுவதன் காரணம் என்ன?

1.       எந்த சிருஷ்டியையும் போல் இல்லாத இறைவனை சுயமாக அறிவது என்பது இயலாது. ஞானத்தின் பட்டினமான நபி (ஸல்) அவர்களும் தன் சொந்த ஆராய்சியால் இறைஞானத்தை பெறவில்லை. இறைவன் வஹியின் மூலம் அறிவித்து கொடுத்த மகத்தான பாக்கியமது. ஆக  இறைவனை அறிவதில் சுயஆராய்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

2.       குரானையும், ஹதீஸிலும் கூறப்பட்ட விளக்கத்தை தெளிவாக அறியும் நபிவழி என்ன?

வஹியின் மூலம் பெருமானார் (ஸல்)அறிந்தார்கள்.
பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள் அறிந்தார்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,

இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானவிளக்கத்தை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு வலியே முர்ஷிதைஅணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசனமும் உறுதி செய்கிறது.

 (நபியே!) யாரை (அவர்களின் மன அமைப்பின் கோரிக்கை படி) அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17)

 இந்த ஆயத்துகளை சிந்தித்து பாருங்கள் சகோதரி!

ஷிர்க், தவ்ஹீது என்பதை எல்லாம் சுய ஆராய்சியாலின்றி பெருமானாரிலிருந்து சங்லித் தொடராய் வந்த விளக்கத்தை அறிந்தோர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

அத்தகைய சித்திக்கீன்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்களானான நல்லடியார்களின் பாதையில் நம் அனைவரையும் இறைவன் செலுத்துவானாக!

நமது சகல கேடுகளுக்கும் மூலக்காரணம் இறைவனை விட்டுத் தூரமாகி கிடப்பதும், இறைவனல்லாதவற்றை பற்றிப் பிடித்து கொண்டிருப்பதுமேயாகும்”  என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள்

நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பொருட்டால் நம் அனைவருக்கும் அந்த பாக்கியமான இறைநெருக்கம் (குர்பு) நஸீபாக எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோமாக! ஆமீன்!உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

38 comments:

demha said...

அஸ்ஸலாமுஅலைக்கும்...வலிமார் எல்லாம் சரிதான், இவர்தான் வலி என்று உங்களுக்கு காட்டித்தந்தவர் யார் இதை நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒருவரின் இறுதி நிலையை அறிந்தவர் யாருமில்லை, அல்லாஹ் மிக அறிந்தவன். சஹாபாக்கள் என்று உயர்ந்த நிலையில் வைத்து கொண்டாடும் நாம் அவர்களின் பாடங்களை ஒதுக்கி வைத்து விட்டு யாரோ (வலிமார்?) சொன்னவைகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது தான் என் கேள்வி. இஸ்லாமிய மார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பூர்த்தியாகிவிட்டது.

மார்க்கத்தை விளக்க வந்தவர்கள் தமது பணியை சிறப்பாக பூர்த்தி செய்து விட்டுத்தான் சென்றார்கள். உங்கள் கூற்று அவர்கள் பணியை முழுமையாக செய்யவில்லை என்பதாக தோன்றுகிறது.

கிளியனூர் இஸ்மத் said...

மாஷா அல்லாஹ் நல்லதொரு விளக்கம்!

புல்லாங்குழல் said...

வலி யார்?
ஈமான் கொண்டு தக்வா செய்வார்கள் என்பது வலிமார்களுக்கு குர்ஆன் அளிக்கும் விளக்கம். அவர்களைப் பார்த்தல் இறைவன் பக்கம் சிந்தனை செல்லும் என்பது ஹதீஸின் வரும் விளக்கம்.

யாரோ சொன்னதை கேட்க சொல்லவில்லை.

/ஷிர்க், தவ்ஹீது என்பதை எல்லாம் சுய ஆராய்சியாலின்றி பெருமானாரிலிருந்து சங்லித் தொடராய் வந்த விளக்கத்தை அறிந்தோர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்/ என்பது தான் நாங்கள் கூறுவதும்.

என்ன கூறியிருக்கிறது என்பதை பொறுமையாக படித்து பாருங்கள் சகோ!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.நூருல் அமீன்,

தங்களின் வாதங்க்க்ளுக்கான அடிப்படையாக நீங்கள் சொன்ன இறைவசனத்தை இப்படித்தான் புரிந்து கொள்வீர்களா...? அந்த வசனம் யாரிடம் யாரைப்பற்றி சொன்னது...? அதற்கு முன்னும் பின்னும் படிக்க மாட்டீர்களா..?

// “ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59)

அறிந்தவர்கள் யார்?குர்ஆனும், ஹதீஸும் இருக்க இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள அந்த விளக்கத்தை வைத்திருக்கும் ஒருவரை அணுக சொல்லி இறைவனே உத்தரவிடுவதன் காரணம் என்ன?//---இது சரியான புரிதலா...? இப்படி அல்லாஹ் நம்மிடமா சொல்கிறான்..? அப்படியா அங்கே உள்ளது...?

//الرَّحْمَٰنُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا// alrrahmanu fas-al bihi khabeeran..!

இங்கே அல்லாஹ் இப்படி கேட்க சொல்வது...யாரை யாரிடம்..?

alrrahmanu - the Most Gracious - الرَّحْمَٰنُ
fas-al - so ask - فَاسْأَلْ
bihi - Him - بِهِ
khabeeran - (as He is) All-Aware. - خَبِيرًا
(thanks - http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=25&verse=59)

சரி, ஒரு வாதத்துக்கு... அந்த ஆயத்துக்கு நீங்கள் கொண்டது போல விளக்கத்தையே எடுத்தாலும் கூட....

//ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.//---இப்படி அல்லாஹ் சொன்னது நபி(ஸல்) அவர்களிடம் அவர்களை நோக்கி அல்லவா..? எனில், நபி (ஸல்...) அவர்கள் யாரிடம் சென்று கேட்பார்கள்...?!?!?! சிருஷ்டியிடமா..?!?!?!!?

இதுகூட சரியான விளக்கமா..? அல்லாஹ் இப்படி நபியை நோக்கி சொல்லி இருக்க முடியுமா..?

உடனே சென்று அந்த ஆயத்தின் முன்னாலும் பின்னாலும் படியுங்கள்... மிக எளிதாக புரியும்..! நாம் தவறாக கொண்ட விளக்கம் தெளியும்..! இன்ஷாஅல்லாஹ்..!

குர்ஆன் வசனங்களுக்கு அதன் முன்னால் பின்னால் சென்று அந்த ஆயத்து இறங்கிய சூழல் தேவை அறிந்து படிக்காமல்...

ஒரு ஆயத்.. அதன் ஒரு பகுதி மட்டும்... என்று எடுத்துக்கொண்டு... தவறான பொருள் கொள்ளுதலே... இதுபோன்ற பல குழப்பங்களுக்கும் வித்திடுகிறது..!

خَبِيرًا இந்த வார்த்தை... குர்ஆனில் மொத்தம் பன்னிரண்டு இடங்களில் வருகிறது..! (thanks :- http://www.searchtruth.com/search.php?keyword=%D8%AE%D8%A8%D9%8A%D8%B1%D8%A7&chapter=&translator=1&search=1&search_word=all&start=0&records_display=10&phonetic=)
மற்ற பதினோரு இடங்களில் இவ்வார்த்தைக்கு " நன்கு அறிந்தவன் " என்ற பொருளில் அல்லாஹ் தன்னையே சுட்டிக்கொள்கிறான். அதேபோல... இங்கும்.. நபி ஸல்... அவர்கள் உட்பட நாம் அனைவரும், அர்ரஹ்மான் பற்றியான விளக்கத்தை நன்கு அறிந்த தன்னிடமே அல்லாஹ் கேட்க சொல்வதாகத்தான் புரிந்து கொள்ள வழி உள்ளது..!

தட்ஸ்ஆல்..!

புல்லாங்குழல் said...

அன்புள்ள ஆஷிக்,

ஆயத்துகளின் ஷானே நுஜூல், சபபே நுஜூல் பற்றிய அறிவை எல்லாம் நான் மறுக்கவில்லை.

நீங்கள் நல்ல ஆய்வு சிந்தனையுள்ளவர் என்பதை நானறிவேன். திறந்த மனதுடன் சிந்தித்து பாருங்கள் அல்லாஹ் என்றவுடன் அவன் நம்முடன் இருக்கும் எண்ணம் உங்களுக்கு வருகின்றதா?

இன்னும் அல்லாஹ்வை பற்றிய உங்கள் விளக்கம் என்ன என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

எனது வாதம் எந்த சிருஷ்டியையும் போல் இல்லாத இறைவனை சுயமாக அறிவது என்பது இயலாது. ஞானத்தின் பட்டினமான நபி (ஸல்) அவர்களும் தன் சொந்த ஆராய்சியால் இறைஞானத்தை பெறவில்லை. இறைவன் வஹியின் மூலம் அறிவித்து கொடுத்த மகத்தான பாக்கியமது. ஆக இறைவனை அறிவதில் சுயஆராய்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தான்.

வஹியின் மூலம் பெருமானார் (ஸல்)அறிந்தார்கள்.
பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள் அறிந்தார்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,

இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானவிளக்கத்தை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘வலியே முர்ஷிதை’ அணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசனமும் உறுதி செய்கிறது.

(நபியே!) யாரை அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17)

இந்த ஆயத்துகளை சிந்தித்து பாருங்கள் சகோதரா!

உங்களயும், என்னையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன்!

HM Rashid said...

முதலில் வணக்கம்,மரியாதை செய்வது,கண்ணியப்படுத்துவது மற்றும் நேசிப்பது இவைகளுக்கிடையே உள்ள வித்தியாசங்களை புரிந்துக்கொள்ளவேண்டும்!!!இதைத்தான் ஹுகூகுல் இபாத் மற்றும் ஹுகூகுல்லாஹ் என்று சொல்லுகிறார்கள்!!அவ்லியாக்களுக்கு மரியாதை செய்வது எப்படி வணக்கமாகும்?ஜியாரத் செய்வது எப்படி கப்ர் வணக்கமாகும்!!இதுபோன்ற வார்த்தை ஜாலங்கள் பொதுமக்களை குழப்புவதை தவிர வேறு ஏதும் இல்லை!!!உயிரற்றவர்கள் எப்படி நமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று கேட்கிறீர்கள்,உயிருள்ளவைகளே தனது தேவைகளையும்,பிறருடைய தேவைகளையும் நிறைவேற்ற முடியாதது என்பதுதானே புனித தௌஹீதுடைய விளக்கமாக உள்ளது!!!

HM Rashid said...

//ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.//---இப்படி அல்லாஹ் சொன்னது நபி(ஸல்) அவர்களிடம் அவர்களை நோக்கி அல்லவா..? எனில், நபி (ஸல்...) அவர்கள் யாரிடம் சென்று கேட்பார்கள்...?!?!?! சிருஷ்டியிடமா..?!?!?!!?//

என்ன கேள்வி இது?'அறிந்தவர்களிடம்' என்று இறைவன் பன்மையில் அல்லவா கட்டளை இடுகிறான்!!ஆகவே நபிபெருமான் மட்டுமல்லாது மற்றவர்களும் ரஹ்மானைப்பற்றி அறிந்துள்ளனர் என்றல்லவா விளங்கவருகின்றது !!

NAGORE FLASH said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
சகோதரரே

(இறைவனிடத்தில் சென்றுவிட்ட முன்னோர்களை மதிக்கிறோம் , அவர்கள் எப்படி மார்க்க விஷயங்களில் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தார்களோ அவ்வாறு நாமும் நடக்க முயற்சிக்கிறோம் – ஆனால் அவர்களின் பெயரால் மார்க்கத்தில் புகுத்திய புதுமையை எதிர்க்கிறோம் ,புறக்கணிக்கிறோம்)
ஒருவரை இறைநேசர் என்று (அதாவது இறைவனை பொருந்திகொண்டவர் என்று ) கூறுவதாக இருந்தால் அவரை பற்றி அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்க வேண்டும்.
1. இந்த (18:65) )இறைவசனத்தில் இறைநேசர் என்று அல்லாஹ் ஒருவரை கூறுகிறான் இந்த வசனத்தை வைத்துக்கொண்டு நாம் விரும்பும் ஒருவரை (உயிரோடு இருப்பவரோ , மரணித்து விட்டவரோ) இறைநேசர் என்று நாமாக எப்படி சொல்ல முடியும் ? (அல்லாஹ் அவரை பொருந்திகொண்டானா என்பது நமக்கு எப்படி தெரியும்)


2. ஒரு வேளை நமக்கு ஒருவரை இறைநேசர் என்று தீர்கமாக தெரிகிறது என்று வைத்துகொள்வோம் – நாம் என்ன செய்ய வேண்டும் ? அவரை போலவே நாமும் இறைநேசர் ஆகவேண்டும் என்று நினைக்க வேண்டும் முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்படி நபி (ஸல்) அவர்களை பின்பற்றி அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வாழ்ந்துகாட்டினாரோ அப்படி நாமும் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டும். இது தான் ஒருவரை பின்பற்றுவது இதில் எந்த தவறுமில்லை.
ஆனால் அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும் இட்ட கட்டளைக்கு மாற்றமாக ஒருவர் செய்தால் யார் செய்தாலும் அது நிராகரிக்க படவேண்டிய ஒன்றாகும். அப்படி ஒருவர் இஸ்லாத்திற்கு மாற்றமாக செய்கிறார் என்பதை நாம் எதை வைத்து மதிப்பிடுவது ??

அல்லாஹ்வின் வேதத்தையும் – நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் மூலமாக தானே.
அதை தானே நாமும் சொல்கிறோம். நான் உங்களிடம் இரண்டு விஷயத்தை விட்டு செல்கிறேன் ஒன்று அல்லாஹ்வின் வேதம் , இரண்டு எனது வழிமுறை – இதை பற்றி பிடிக்கும் காலம் வரை நீங்கள் வழிதவறமாடீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் எதற்கு சொன்னார்கள் ??

வாழையடி வாழையாக மார்க்கத்தை பின்பற்றுகள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே ?
எதற்கு திருக்குரானை அல்லாஹ் பாதுகாக்கிறேன் என்று சொல்கிறான் ?
திருக்குரான் உலகமக்களுக்கு நன்மை – தீமையை பிரிதரிவிகின்ற வழிகாட்டி என்று ஏன் சொல்கிறான் ? வலிமார்களுக்கு மட்டுமே குரான் என்று எங்காவது சொல்லப்பட்டு இருக்கிறதா ?

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இருபத்தி மூன்று வருட நபித்துவக் காலத்தில் கழிவறை ஒழுக்கங்கள் முதல் ஆட்சி முறை வரை தமது தோழர்களுக்கு கற்றுக்கொடுக்காது இந்த உலகைப் பிரியவில்லை என்பதை பின்வரும் நபி மொழி உறுதி செய்கின்றது.

عَنْ سَلْمَانَ قَالَ قِيلَ لَهُ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ قَالَ فَقَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ (مسلمஃبرقم:262)
ஒருவர் ஸல்மான் (ஸல்) அவர்களிடம்: உங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அற்பமான காரிங்களைக் கூட உங்களுக்கு கற்றுத்தந்துள்ளார்களே! என (இழிவாக) க் கேட்ட போது ஆமாம் (உண்மைதான்) நாம் மல சலம் கழிக்கின்ற போது வலதை உபயோகிக்கக் கூடாது என்றும் மூன்று கற்களை விட குறைவானவற்றில் சுத்தம் செய்யக் கூடாது என்றும் மிருக விட்டையினாலோ, எலும்பினாலோ, சுத்தம் செய்யக் கூடாது என்றும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர். (அது பற்றி பெருமைப்படுகின்றோம்) என பதிலளித்தார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்)

......இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்...... (அத்:5. வச:3)

நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றி நில்லுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள்.(ஆதார நூல்: புகாரி. ஹதீஸ் 7288)

HM Rashid said...

//ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.//---இப்படி அல்லாஹ் சொன்னது நபி(ஸல்) அவர்களிடம் அவர்களை நோக்கி அல்லவா..? எனில், நபி (ஸல்...) அவர்கள் யாரிடம் சென்று கேட்பார்கள்...?!?!?! சிருஷ்டியிடமா..?!?!?!!? //


என்ன கேள்வி இது?'அறிந்தவர்களிடம்' என்று இறைவன் பன்மையில் அல்லவா கட்டளை இடுகிறான்!!ஆகவே நபிபெருமான் மட்டுமல்லாது மற்றவர்களும் ரஹ்மானைப்பற்றி அறிந்துள்ளனர் என்றல்லவா விளங்கவருகின்றது !!
HM Rashid

புல்லாங்குழல் said...

சகோ நாகூர் ஃபிளாஸ்,

அல்லாஹ்விடமிருந்து ரஸூல் பெற்ற விளக்கதை நோக்கிய நகர்வு நம் முயற்சிகளெல்லாம்.

“ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்கிறது இறைவேதம்.

வஹியின் மூலம் பெருமானார் (ஸல்)அறிந்தார்கள்.
பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள் அறிந்தார்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,

இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானவிளக்கத்தை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘வலியே முர்ஷிதை’ அணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசனமும் உறுதி செய்கிறது.

(நபியே!) யாரை அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17)

இந்த ஆயத்துகளை சிந்தித்து பாருங்கள் சகோதரா!

உங்களையும், என்னையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.நூருல் அமீன்,

//இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானவிளக்கத்தை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘வலியே முர்ஷிதை’ அணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசனமும் உறுதி செய்கிறது.//

---இப்படி நீங்கள் எப்போது தெரியுமா சொல்லலாம்..? நேற்றுதான் இந்த ஆயத்து உலக மக்களுக்காக இறங்கியது என்றால் மட்டுமே அப்படி சொல்லலாம்..! இப்போது நமக்கு ஒருவர் அப்படி வேண்டும் என்று..!

ஆனால், நபி ஸல்.. அவர்களுக்கும் மக்களுக்கும் இந்த ஆயத்து அப்போதே இறங்கிவிட்டது..! அதற்கான விளக்கமும் நமக்கு அப்போதே நபி ஸல்.. மூலம் கிடைத்தும் விட்டது..! அந்த விளக்கத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்..!

எப்படி..?

ம்ம்ம்... இப்போது செல்வோம்... நீங்கள் சுட்டிய ஆயத்துக்கு... அதன் முந்திய வரியோடு சேர்த்து..!

...(நபியே!)... எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; யாரை அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17).

அக்காலத்தில்... அல்லாஹ் நேர்வழியில் செலுத்திய நபி ஸல்.. அவர்களை விட சிறந்த ஒரு ‘வலியே முர்ஷிதை’ நானோ நீங்களோ காட்டிவிட முடியுமா...? ஒருக்காலும் முடியாது அல்லவா..!?

இப்பேர்பட்ட மனிதரிடம்தான் அல்லாஹ் சொல்கிறான்... "நேர்வழி கொடுப்பது... கொடுக்காமல் இருப்பது எல்லாம் என் பொறுப்பு... உனக்கு அதில் எந்த பவரும் இல்லை" என்று..!

ஓர்... உதாரணத்துக்கு, அல்லாஹ் தெளிவாக அபுலஹப் பற்றியும் அவனது வழிகேட்டில் விடப்பட்ட எதிர்கால நிலை பற்றியும் தெளிவாக 'தப்பத்யதா..' சூராவில் அறிவித்து விட்டான்...!

அப்போது... நபி (ஸல்) ஐ விட பெரிய ‘வலியே முர்ஷிதை’ நாம் காண இயலாது..! இந்த வசனம் சொல்வது இதுதான்.. இந்த ‘வலியே முர்ஷித்’ தான் சுயமாக நினைத்தாலும் கூட ஒருக்காலும் அபுலஹபை வழிகேட்டில் இருந்து மீட்கவே முடியவே முடியவே முடியாது என்று...!

அல்லது..

அபுலஹப் தன்னுடைய 'வலியே முர்ஷித்' ஆக நபி (ஸல்..) அவர்களையே இனி எடுத்துக்கொண்டாலும்... அல்லாஹ்வின் வசனத்துக்கு எதிராக அவன் நேர்வழி பெறவும் இயலாது..!

(இந்த வசனத்தை பொய்ப்பிக்க சூப்பர் சான்ஸ் இருந்தும் கூட அபுலஹப் முஸ்லிம் ஆகவும் இல்லை... கலிமாவும் சொல்லவில்லை... என்பதை கவனிக்கவும்..!)


முஹம்மத் நபி(ஸல்) என்ற இப்பேர்பட்ட ‘வலியே முர்ஷித்’ ஆலேயே அபுலஹபுக்கு நேர்வழி காட்ட முடியாது என்றால்... வேறு எந்த மனிதரால்தான் அது முடியும் சகோ.நூருல் அமீன்..? எவராலும் முடியாது அல்லவா.... அல்லாஹ் நாடினால் அன்றி..!!!

எனவே... நமக்கு இப்போது 'வலியே முர்ஷித்' அல்லாஹ்வும்... அவனின் வேதமும்.. அதன் விளக்கமாக வாழ்ந்து காட்டிய அவனின் தூதரும் மட்டுமே..! மட்டுமே..! மட்டுமே..! வேறு எவரும் இல்லை..!

1:5 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7 صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பு சகோ நூருல் அமீன். அவ்வபோது உங்கள் பதிவை பார்வையிட்டாலும் கருத்துரை இடுவது இதுவே முதல் முறை.

இந்த ஆக்கத்தை முழுமையாக படித்தாலும் என்னால் உங்கள் கருத்தை முழுவதும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.

இறை நேசர்கள் குறித்த உங்கள் பார்வை என்ன என்பது இங்கே முக்கியமல்ல, மார்க்க பார்வையில் அவற்றை மதிப்பீடு செய்வதே பொருத்தம்.

எளிதாக உங்கள் பார்வைக்கு ஒரு கேள்வி

==இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானவிளக்கத்தை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘வலியே முர்ஷிதை’ அணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசனமும் உறுதி செய்கிறது.==

இப்படி குறிப்பிடும் நீங்கள் அந்த வலியே முர்ஷிதை அணுக வேண்டும் என்கிறீர்கள்.

இங்கே நாம் கேட்பது
நீங்கள் குறிப்பிடும் அந்த வலியே முர்ஷித் யார்?
அவரை பின்பற்றுதல் என்றால் எவ்வாறு?
பின்பற்றுவதற்காக காரண்ங்கள் எவை?

இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்

NAGORE FLASH said...

சகோதரரே .. எனக்கு ஒன்றை விளக்குங்கள் முர்ஷித் என்பவர் யார் ? அவரை எப்படி அறிந்துகொள்வது ? ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஒரு முர்ஷித் என்ற அளவுகோலா அல்லது பல பேர்களா... யாரை பார்த்தால் அல்லாஹ்வின் நியாபகம் வருகிறதோ அவர்கள் எல்லோரும் முர்ஷித் ஆவார்களா ? சற்று விளக்கவும்.

NAGORE FLASH said...

அல்லாஹ் கூறுகிறான்: -
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”(அல்-குர்ஆன் 2:159)

“சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்-குர்ஆன் 3:71)

அல்லாஹ்வும் ,அவனது தூதரும் எதையும் நம்மிடம் மறைக்கவில்லை ... நாம் தான் உண்மையை நமக்கு நாமே மறைத்துகொள்கிறோம். மக்களே! சிந்தித்து புரிந்துகொள்ளுங்கள் எனது பேச்சை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களுடைய அல்லாஹ்வின் நூலையும் (திருக்குரான்) அவனுடைய தூதரின் வழிமுறையையும் விட்டுசெல்கிறேன். நீங்கள் அவற்றை பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாடீர்கள். (முஸ்லீம் – 2334 ,இப்னு மாஜா -3074) உங்களுக்கு புரியும்படி ஓர் உதாரணம் சொல்கிறான் கேளுங்கள் : ஒரு பேப்பரில் உள்ள ஒரு செய்தியை printout எடுகிறீர்கள் அதை ஒரு xerox எடுகிறீர்கள் இப்போது xerox எடுக்கப்பட்ட பேப்பரை வைத்து மீண்டும் xerox எடுகிறீர்கள் இப்படியாக ஒவ்வொரு முறையும் கடைசியாக xerox எடுத்த பேப்பரை வைத்து நூறு முறை xerox எடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் இப்போது கடைசியாக எடுத்த xerox பேப்பரில் இருக்கும் செய்தி நம் கண்ணுக்கு புலபடுவது கடினம் ... காரணம் originalலை வைத்து நாம் xerox எடுக்கவில்லை. xeroxயை வைத்து தான் xerox எடுத்தோம் அதை போல் யாரை அல்லாஹ் இவ்வுலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பிஇருக்கிறானோ , யாரை தன்னுடைய நேசராக எடுத்துகொண்டானோ அந்த உத்தம நபியை பின்பற்றினால் மட்டுமே நாம் மறுமையில் வெற்றிபெற முடியும்.. சரி நீங்கள் சொல்லும் வலிமார்களை பின்பற்றலாமா என்றால் பின்பற்றலாம் அவர்கள் அல்லாஹ்வின் தூதரை பின்பற்றும்வரை மாறாக மார்க்கத்தில் இல்லாததை எல்லாம் சொன்னால் அது அல்லாஹ்வின் தூதரின் வழிக்கு மாற்றமானது. தெரியாமல் தான் கேட்கிரேன் அல்லாஹ் இந்த குரானை உலகமக்கள் அனைவருக்கும் வழங்கிஇருக்கிறேன் என்று கூறுகிறானா அல்லது குறிப்பிட்ட சிலருக்காக வழங்கிருப்பதாக சொல்கிறானா ..? சிந்திக்க வேண்டும் சகோதரரே

suvanappiriyan said...

சலாம்!

ஆஷிக்கும், குலாமும், ஆமினாவும் தங்களின் அருமையான கருத்துக்களை வைப்பதால் நான் பார்வையாளனாக இருக்கிறேன். ஆக்கபூர்வமான விவாதம் தொடரட்டும்.

புல்லாங்குழல் said...

அன்புள்ள ஆஷிக்,

(நபியே!) யாரை அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17)

குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே லவ்ஹுல் மஹ்பூலில் பதிவானது. பின்பு தான் சம்பவங்கள் நடந்தன என்பதையும் மறக்க வேண்டாம்

அதன் வெளிப்பாடு 14 நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களை முன்னோக்கி வெளிப்பட்டாலும் அதன் செய்தி கியாமத் நாள் வரை உள்ள அனைத்து சமுதாயத்துக்கும் பொதுவானது. வழிகாட்டக் கூடியது.

எந்த வலியும் ஸஹாபாக்களின் அந்தஸ்த்தை எட்ட முடியாது. பின் நபியின் அந்தஸ்த்தை சொல்ல முடியுமா?

வலியே முர்ஷித் என்பது நபியை நோக்கிய சொல்லல்ல. நபி முர்ஷ்துகளுக்கெல்லாம் முர்ஷித் ஆயிற்றே சகோதரா!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//எந்த வலியும் ஸஹாபாக்களின் அந்தஸ்த்தை எட்ட முடியாது.//

----அப்படீன்னா...
சில/பல 'வலியே முர்ஷிது'களை நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள் போல..!
----எனில்......

///இங்கே நாம் கேட்பது
நீங்கள் குறிப்பிடும் அந்த வலியே முர்ஷித் யார்?
அவரை பின்பற்றுதல் என்றால் எவ்வாறு?
பின்பற்றுவதற்காக காரண்ங்கள் எவை?///

சகோ.குலாம் கேட்ட மேற்படி கேள்விக்கு நீங்கள் பதில் சொன்ன பிறகு இன்ஷாஅல்லாஹ் தேவை இருந்தால் தொடர்கிறேன்..!

புல்லாங்குழல் said...

அன்பு சகோதரர் குலாமுக்கு

வலியே முர்ஷித் யார்?
அவரை பின்பற்றுதல் என்றால் எவ்வாறு?
பின்பற்றுவதற்காக காரண்ங்கள் எவை? என கேட்டிருந்தீர்கள்.

பெருமானாரிடம் விளக்கம் பெற்ற சஹாபாக்கள் அனைவருமே வலியே முர்ஷித்கள் தான்.

காலம் செல்ல செல்ல இறைவனின் உலூஹிய்யத் ஞானம் பற்றி விளக்கக் கூடியவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள்.

அவர்களிடம் நாம் பெற வேண்டிய முக்கிய அம்சம் நபிவழியில் நம் இறைவனைப் பற்றிய, தவ்ஹீத், ஷிர்க், குர்ப் - மஈய்யத், ஜபர் வ இக்தியார் போன்ற அகீதா சம்ந்தப்பட்ட கல்வியை தான்.

அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடாத, அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காத அப்தியத்தின் பத்தினித்தனம் தான் வலிமார்களின் சகவாசத்தில் இறைவன் அருளும் மாபாக்கியம்.

NAGORE FLASH said...

சகோதரே ..,

//// வஹியின் மூலம் பெருமானார் (ஸல்)அறிந்தார்கள்.
பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள் அறிந்தார்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள் ///

இப்படி வாழையடி வாழையாக தெரிந்துகொள்வோம்
திருக்குரானும் & சுன்னாவும் தேவையில்லை என்கிறீர்களா ? ... மேலும் அறிந்தார்கள் அறிந்தார்கள் என்கிறீர்களே அது என்ன ... எந்த ஒன்றை அல்லாஹ்வின் தூதர் அறிந்துகொண்டு முர்ஷித்தை தவிர வேறு யாருக்கும் சொல்லாமல் விட்டு சென்றார்கள் சொல்லுங்கள .... உங்கள் பார்வையில் ... முர்ஷித் என்பவர் யார் ? அவரை எப்படி அறிந்துகொள்வது ? ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஒரு முர்ஷித் என்ற அளவுகோலா அல்லது பல பேர்களா... யாரை பார்த்தால் அல்லாஹ்வின் நியாபகம் வருகிறதோ அவர்கள் எல்லோரும் முர்ஷித் ஆவார்களா ? சற்று விளக்கவும். நீங்கள் தற்போது யாரையேனும் முர்ஷித் என்று காட்ட இயலுமா ?..

NAGORE FLASH said...

சகோதரர் ஒ.நூருல் அமீன் அவர்களே ... நானும் நீங்கள் என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன் முடியவில்லை... ஒன்றை தெளிவாக சொல்லுங்கள்... அல்லாஹ்வின் வேதம் திருக்குரான் & நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை மட்டுமே மார்க்கம் என்று பின்பற்றுகிறேன்... அல்லாஹ்வின் தூதர் விட்டு சென்ற இந்த இரண்டிலும் இல்லாத ஒன்று நீங்கள் சொல்லும் முர்ஷித்திடம் இருக்கிறதா ? அது என்ன... குரான் -ஹதீஸ்ற்கு முரணாக , புதிதாக ஏதுமில்லை என்றால் எனக்கு முர்ஷித் ஏன் தேவை ... தெளிவாக புரியும்படி பதில் எதிர்பார்கிறேன்

புல்லாங்குழல் said...

அன்புள்ள நாகூராரே,

சகோதர் குலாமுக்கு கூறியதிலேயே உங்களுக்கான பதில் இருக்கிறதே!

முஹய்யத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி(ரஹ்), நாகூர் ஷாஹுல் ஹமீதி ஒலியுல்லாவையே அவர்களெல்லாம் அவ்லியா என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்போருக்கு மத்தியில் நான் எத்தனை பேரை காட்டினாலும் மனம் நம்பப் போவதில்லை.

உண்மையில் நீங்கள் அரியும் ஆர்வத்தில் கேட்டால் தொழுகையில் இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தக்கீமில் என்னை நேர்வழியிலில் செலுத்துவாயாக என உளம் உருகி கேளுங்கள். அல்லாஹ் அருளாத வரை உங்களுக்கு நேரிலேயே ஒரு முர்ஷித் இருந்தால் கூட மனம் ஏற்றுக் கொள்ளாது.

புல்லாங்குழல் said...

அன்பு நாகூராரே,

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உலூஹிய்யத் என்றால் என்ன? ருபூபிய்யத் என்றால் என்ன? பிடரி நரம்பை விட சமீபமானவனை நம்மால் ஏன் நெருக்கமாக உணர முடியவில்லை. நீங்கள் இரண்டு பேர் இருந்தால் மூன்றாவதாக நான் இருக்கின்றேன் என இறைவன் சொல்வதன் பொருள் என்ன?
அல்லாஹ்வை பார்ப்பதை போல வணங்குதல் என்றால் என்ன? குறைந்தபட்சம் அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற உணர்வை பெறுவது எப்படி? தக்வா என்றால் என்ன? நபிவழியில் ஷிர்க், தவ்ஹீதின் விளக்கம் என்ன? இதை எல்லாம் அறிந்து விட்டோமா சகோ!

NAGORE FLASH said...

சகோதரே .. ஆதாரம் நான் கேட்கவில்லை .. திருக்குரான் தான் ஆதாரம் கேட்க சொல்கிறது .. எதையும் ஆதாரத்தின் அடிப்படையில் நம்ப சொல்கிறது. ... நாங்கள் உங்கள் பார்வையில் நேர்வழியில் இல்லை சரி .. நீங்கள் நேர்வழியில் இருகிறீர்கள் அப்படி தானே ..நான் வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல் நேரிலேயே ஒரு முர்ஷித் இருந்தால் கூட எற்றுகொள்லாமல் இருக்கலாம் .. ஆனால் நீங்கள் அப்படி அல்ல .. அதனால் தற்போது வாழும் ஒரு முர்ஷித்தை காட்டுங்களேன் ... நான் நேர்வழி பேர வேண்டும் என்ற என்னதிலாவது... அல்லாஹும் அவனுடைய தூதரும் சொல்லாத விஷயம் அபப்டி என்ன தான் இருக்கிறது அவரிடம் என்பதை காண ஆவளோடு இருக்கிறேன் .. என்னுடைய வேண்டுகோள் நியாயமானது என்பதில் உங்களுக்கு மாற்றுகருத்து இருக்காது என்று நம்புகிறேன்.

NAGORE FLASH said...

சகோதரே ///பிடரி நரம்பை விட சமீபமானவனை நம்மால் ஏன் நெருக்கமாக உணர முடியவில்லை // உணர முடியவில்லை என்று யார் சொன்னது... ??

//நீங்கள் இரண்டு பேர் இருந்தால் மூன்றாவதாக நான் இருக்கின்றேன் என இறைவன் சொல்வதன் பொருள் என்ன? // இதற்கு பொருள் அல்லாஹ்வின் தூதர் சொல்லவில்லை முர்ஷித் தவிர யாருக்கும் தெரியாது என்று யார் சொன்னது ..? //அல்லாஹ்வை பார்ப்பதை போல வணங்குதல் என்றால் என்ன? குறைந்தபட்சம் அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற உணர்வை பெறுவது எப்படி? தக்வா என்றால் என்ன? நபிவழியில் ஷிர்க், தவ்ஹீதின் விளக்கம் என்ன? // இதுவெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படை இதை கூட தெரிந்துகொள்ள வில்லை என்றால் அவன் இஸ்லாத்தை புரிந்துகொள்ள முடியாது... ஆமாம் இதை தான் முர்ஷித்திடம் நாம் கற்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா ?

புல்லாங்குழல் said...

சகோ நாகூர் ஃபிளாஸ்,

/அல்லாஹும் அவனுடைய தூதரும் சொல்லாத விஷயம் அபப்டி என்ன தான் இருக்கிறது அவரிடம் என்பதை காண ஆவளோடு இருக்கிறேன்/

முர்ஷித் என்றால் அல்லாஹும் அவனுடைய தூதரும் சொல்லாத விசயத்தை சொல்லக் கூடியவர்கள் என்ற Mind setல் இருக்கின்றீர்கள் அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு அந்த மனத்தடையை விளக்க துவா செய்கின்றேன்.

எனது வலைப்பக்கத்தில் உள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் அல்லாஹ் ரஸூல் சொல்லக் கூடிய ஞான விளக்கங்களைத் தான் கூறுகிறது அவைகளை படித்து பாருங்களேன். விரும்பினால் அகப்பார்வை எனும் தலைப்பிலிருந்து ஆரம்பியுங்கள்.இஹ்சானில் உள்ள கட்டுரையை படியுங்கள். உங்கள் கருத்துகளை முன்வையுங்கள் இன்ஷா அல்லாஹ் மீண்டும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வோம்.வஸ்ஸலாம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அன்புள்ள சகோ.நூருல் அமீன்...

///எனவே... நமக்கு இப்போது 'வலியே முர்ஷித்' அல்லாஹ்வும்... அவனின் வேதமும்.. அதன் விளக்கமாக வாழ்ந்து காட்டிய அவனின் தூதரும் மட்டுமே..! மட்டுமே..! மட்டுமே..! வேறு எவரும் இல்லை..!///

----இதுதான் முன்னர் நான் பின்னூட்டத்தில் சொன்னது...!

ஆனால், நீங்கள் இப்பதிவில் எனக்கும் முன்னர் சொன்னது என்னவென்றால்....

////வஹியின் மூலம் பெருமானார் (ஸல்)அறிந்தார்கள்.
பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள் அறிந்தார்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,////

இப்படியாக வந்து...
புஹ்காரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், நஸயி, இப்னுமாஜா, அஹ்மத், தாரகுத்னி... என இப்படியாக ரெக்கார்ட் செய்யப்பட்டு முடிந்து இருக்கிறது...

...என்று நான் நினைத்துக்கொண்டிருக்கையில், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால்...

/////இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானவிளக்கத்தை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘வலியே முர்ஷிதை’ அணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசனமும் உறுதி செய்கிறது./////

----இதுதான்... யார்..? அவர் தான் யார்..? இப்போதும் உயிரோடு இருக்கும் அந்த வலியே முர்ஷித்கள் எவர்..?

"மேற்படி ஹதீஸ் நூல்களில் எவற்றிலும் இல்லாத ஞானவிளக்கத்தை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும்" ஒரு ‘வலியே முர்ஷிதை' காட்டுங்களேன்.... என்றால்....

//முர்ஷித் என்றால் அல்லாஹும் அவனுடைய தூதரும் சொல்லாத விசயத்தை சொல்லக் கூடியவர்கள் என்ற Mind setல் இருக்கின்றீர்கள் அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு அந்த மனத்தடையை விளக்க துவா செய்கின்றேன்.//

----இது இப்போது நீங்கள் கடைசி மறுமொழியில் நீங்கள் சகோ.நாகூர்ஃப்ளாஷ்க்கு சொல்கிறீர்கள்..!

தலை சுத்துகிறது...!

இதற்குத்தான்.....

//////குரான் -ஹதீஸ்ற்கு முரணாக , புதிதாக ஏதுமில்லை என்றால் எனக்கு முர்ஷித் ஏன் தேவை//////

.....என்று சகோ.நாகூர்ஃப்ளாஷ் முன்னாடியே இப்படி உங்களிடம் முன்னாடியே கேட்டாரே...?


/ஷிர்க், தவ்ஹீது என்பதை எல்லாம் சுய ஆராய்சியாலின்றி பெருமானாரிலிருந்து சங்லித் தொடராய் வந்த விளக்கத்தை அறிந்தோர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்./

---என்று அதற்கும் முன்னாடியே பதிவில் சொல்லி இருந்தீர்கள் அல்லவா..? "அவர்கள் இன்னார்தான்" என்று எங்களுக்கும் அறியத்தந்தால்... மக்கள் அனைவருமே பயன் பெறலாமே..? 'நீங்கள் மட்டும் தனியே ரகசியமாக பயன்பெற வேண்டும்' என்று நினைக்கிறீர்களா சகோ.நூருல் அமீன்..?

தயவு செய்து இதற்கான விளக்கத்தை... புதிய கேள்விகளாக இல்லாமல்... எளிதாக புரியும்படி நேரடியான பதிலாக கூற வேண்டும்... என்று அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்..!

புல்லாங்குழல் said...

அன்புள்ள சகோதரர்கள் ஆசிக், நாகூர் ஃபிளாஸ்,
எனக்கு இறையருளால் கிடைத்த முர்ஷித் ஃபைஜி ஷாஹ் நூரி(ரஹ்) அவர்களின் பெயரை என் வலைத் தளத்திலேயே பல முறை குறிப்பிட்டிருக்கின்றேன்.’இறைஞான ஒளிவிளக்கு’ என்ற தலைப்பில் ஒரு இடுகையும் உள்ளது.
அடுத்து அவர்கள் வலியேமுர்ஷித் என்பதற்கு என்ன ஆதாரம் என நீங்கள் கேட்கலாம்.
இன்று என் போன்ற ஆயிரக்கணக்கானோர் ஷரியத்தை பாரமாக நினைக்காமல் இன்ப ஷரியத்தாக ஆனது.
நாங்கள் அல்லாஹ் என்று பெயரை சொல்லும் பொழுது காதலால் கசிந்துருகும் ஆஷிக்கானது.
அவர்கள் தோழமையில் கிடைத்த இறைஞான விளக்கம், தர்பியத்தின் மூலம் அல்லாஹ் அருள் செய்த ஹிதாயத்.
அடுத்து ஆதம் நபி முதல் பெருமானார்(ஸல்) வரை வந்த அனைத்து நபிமார்களும் கொண்டு வந்த அடிப்படை message “லா இலாஹா இல்லல்லாஹு ..” எனும் கலிமா. நம் தவ்ஹீதெனும் அடிப்படையின் விளக்கம்.
வலியே முர்ஷித் என்பவர்கள் இந்த நபி வழி விளக்கத்தை (உலூஹிய்யதை) தெளிவாக விளக்க்க் கூடியவர்கள்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை என்ற கலிமாவின் தவ்ஹீத் விளக்கம் தான் எல்லோருக்கும் தெரியுமே என நினைக்கலாம். இன்னும் ஆழமான விஷயம் கலிமா. இன்னும் ஆழமான விஷயம் தவ்ஹீத்.
தவ்ஹீத் என்றால் என்ன? என்பதை கேட்டு பாருங்கள்.
தவ்ஹீத் - ஏகத்துவம் என்பது தவஹ்ஹுத் ஒன்றுபடுத்துவது என்பதிலிருந்து வந்தது. அல்லாஹ் ஒருவன் (ONENESS OF ALLAH) என்பதல்ல தவ்ஹீத். அல்லாஹ் என்பது பலர் என யாரும் கூறவில்லை. தேவையை நிறைவேற்றும் இறைத் தன்மை (உலூஹிய்யத்) பல சிருஷ்டிகளில் காணப்படுகின்றது. அந்த இறைத்தன்மைக்கு (உலூஹிய்யத்துக்கு) சொந்தக்காரனான இலாஹ் ஒருவன் (ONENESS OF ILAH) என்பது தான் தவ்ஹீத்.
மாற்று கருத்து கொணட அபுல் அஃலா மௌதூதி அவர்கள் கூட இன்று நாம் இலாஹ் என்பதற்க்கு விளங்கி இருக்கும் பொருள் பெருமானார் காலத்திய விளக்கத்திலிருந்து வேறுபட்டது என குறிப்பிடுகின்றார்கள்.
என் முர்ஷிதின் பெயரையும் மறைக்கவில்லை. அவர்கள் மூலம் பெற்ற விளக்கத்தையும் மறைக்கவில்லை. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாற்று கருத்துள்ள அறிஞர்களின் நூல்களை வாசிப்பதும். நான் கொண்டிருக்கும் நம்பிக்கையுடன் அவர்களின் கண்ணொட்டத்தை ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்வது வழக்கம்.
உங்களுக்கு நேரமிருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள இடுகைகளை பார்வையிடுங்கள்.
அகப்பார்வை – அத்தியாயம் 4 மறைந்த பொக்கிஷம்(http://onameen.blogspot.com/2010/06/4.html)
தவ்ஹீதே உலூஹிய்யத் – நபி வழி வந்த ரகசியம்(http://onameen.blogspot.com/2012/02/blog-post_24.html)
தவ்ஹீத் தஸஃவுப் சில விளக்கங்கள் - http://onameen.blogspot.com/2010/10/blog-post_13.html
யார் அந்த மனிதர்? - http://onameen.blogspot.com/2011/08/blog-post_27.html
நன்றி! வஸ்ஸலாம்.

Anonymous said...

Mashaallah very nice answer its a good article....


-s.ahmed

புல்லாங்குழல் said...

பெயரை வெளிடாமல் 6 கருத்துரைகள் பதித்த நண்பரே!நீங்கள் சிரமம் எடுத்து கொண்டு சகோதரர்கள் ஆஷிக்,நாகூர் ஃபிளாஸ், குலாம், demha ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முன் வந்ததற்கு நன்றி! ஆனால் உங்கள் வார்த்தைகளில் உள்ள கடுமையான சாடல்களினால் அவற்றை என்னால் வெளியிட முடியவில்லை.மன்னிக்கவும்.

பிர்அவ்ன் சபைக்கு சென்ற மூஸா நபியிடம் சங்கையான் வார்த்தைகளில் (கௌலன் கரீமா) உரையாட சொல்கின்றான் அல்லாஹ் என்பதை குறிப்பிட்ட என் ஷெய்கு அவர்கள் நாம் மூஸா நபியை விட உயர்ந்தவர்கள் அல்ல . நம்மை எதிர்க்கும் அன்பு சகோதரர்கள் ஃபிர்அவ்னை விட மோசமானவர்கள் அல்ல அவர்களிடம் கண்ணியமான முறையில் பதிலளியுங்கள் என பல முறை கூறியுள்ளார்கள்.அதனால் கூடியவரை அதை பின்பற்ற முயல்கின்றேன்.

முடிந்தால் கடுமையான வார்த்தைகளை நீக்கி விட்டு, உங்கள் பெயருடன் பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

Anonymous said...

demha,முஹம்மத் ஆஷிக் citizen of world ,NAGORE FLASH ,G u l a m உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன் பதில் சொல்லுங்கள்..
demha,முஹம்மத் ஆஷிக் citizen of world ,NAGORE FLASH ,G u l a m நீங்கள் ஒரு பள்ளிக்கு தொழுக போகின்றீகள். நீங்கள் பள்ளிவாசலுக்குள் செல்ல விடாமல் ஒருவர் உங்களை தடுக்கிறார் .. நீங்கள் ஏன் என்று கேட்கின்றீகள். அதற்கு அவர் பள்ளிக்குள் செல்ல முஸ்லீம்கள் மட்டும் தான் அனுமதி உண்டு என்று சொல்கிறார். அதற்கு நீங்கள் , நாங்களும் முஸ்லீம் தான் என்று சொல்கிறீகள். அதற்கு அவர் நீங்கள் முஸ்லீம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் என்ன செய்வீர்கள் ???
நீங்கள் முஸ்லிம் என்பதற்கு குரான் மற்றும் ஹதீஸ் மூலம் உங்களால் நிரூபிக்க முடியுமா என்று கேட்கின்றார்..
அதற்கு நீங்கள் ஆம் முடியும். குர்ஹன் மற்றும் ஹதீஸ் படி ஒருவர் கலிமாவை சொன்னால் முஸ்லீம் தானே என்று கலிமாவை சொல்கின்றீகள்..
அதற்கு அவர் சொல்கிறார் கலிமாவை சொன்னால் முஸ்லீம் தான் ஆனால் நீங்கள் முஸ்லீம் என்பதற்கு என்ன ஆதாரம் என்கின்றார். மேலும் அவர் குர்ஹான் மற்றும் ஹதீஸில் உங்கள் பெயர்களை போட்டு முஸ்லீம் என்று சொல்லி இருக்கிறதா ... நீங்கள் முஸ்லீம் என்று ஒன்று அல்லாஹ், சொல்ல வேண்டும் அல்லது நபி சொல்ல வேண்டும் .நீங்களே உங்களை முஸ்லீம் என்று சொன்னால் நான் எப்படி நம்புவது என்கின்றார்..

இப்பொழுது உங்கள் நிலை என்ன .. ????

சிந்தியுங்கள் இப்படிதான் இருகிறது உங்கள் வாதம்!!!!!!!!!!!!


இவர் தான் வலி என்பதற்கு ஆதாரம் கேட்டும் ,உங்கள் வாதம் இப்படிதான் இருகிறது...

---------PART 1--- Mohammed Kaleemullah

Anonymous said...

நீங்கள் சொன்னவைகளில் இருந்து நான் சில கேள்வி கேட்கிறேன் :

//////1. இந்த (18:65) )இறைவசனத்தில் இறைநேசர் என்று அல்லாஹ் ஒருவரை கூறுகிறான் இந்த வசனத்தை வைத்துக்கொண்டு நாம் விரும்பும் ஒருவரை (உயிரோடு இருப்பவரோ , மரணித்து விட்டவரோ) இறைநேசர் என்று நாமாக எப்படி சொல்ல முடியும் ? (அல்லாஹ் அவரை பொருந்திகொண்டானா என்பது நமக்கு எப்படி தெரியும்)//////


அல்லாஹுதாலா சில அடையாளங்களை கூறி அவர்களை இறை நேசர் என்று சொல்கிறான் என்றால் நாம் அந்த அடையாளங்களை வைத்து ஒருவரை இறை நேசர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று தானே அர்த்தம்..

ஒரு முஸ்லீம் இப்படி தானே சிந்திக்க வேண்டும்... அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள்.. உங்கள் வார்த்தையை நன்கு சிந்தித்த பின் சொல்லுங்கள் ....

///////2. ஒரு வேளை நமக்கு ஒருவரை இறைநேசர் என்று தீர்கமாக தெரிகிறது என்று வைத்துகொள்வோம் – நாம் என்ன செய்ய வேண்டும் ? அவரை போலவே நாமும் இறைநேசர் ஆகவேண்டும் என்று நினைக்க வேண்டும் முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்படி நபி (ஸல்) அவர்களை பின்பற்றி அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வாழ்ந்துகாட்டினாரோ அப்படி நாமும் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டும். இது தான் ஒருவரை பின்பற்றுவது இதில் எந்த தவறுமில்லை. //////
////////ஆனால் அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும் இட்ட கட்டளைக்கு மாற்றமாக ஒருவர் செய்தால் யார் செய்தாலும் அது நிராகரிக்க படவேண்டிய ஒன்றாகும். அப்படி ஒருவர் இஸ்லாத்திற்கு மாற்றமாக செய்கிறார் என்பதை நாம் எதை வைத்து மதிப்பிடுவது ??//
அல்லாஹ்வின் வேதத்தையும் – நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் மூலமாக தானே.
அதை தானே நாமும் சொல்கிறோம். நான் உங்களிடம் இரண்டு விஷயத்தை விட்டு செல்கிறேன் ஒன்று அல்லாஹ்வின் வேதம் , இரண்டு எனது வழிமுறை – இதை பற்றி பிடிக்கும் காலம் வரை நீங்கள் வழிதவறமாடீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் எதற்கு சொன்னார்கள் ??//////////////
வாழையடி வாழையாக மார்க்கத்தை பின்பற்றுகள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே ?/////////

கேள்வி கேட்கும் முன் சிந்திங்கள்...
இங்கு (வலிமார்கள்) யாரும் குரான் னுக்கும் ஹதீஸ் சுக்கும் மாற்றமாக எதையும் வாழையடி வாழையாக பின்பற்ற சொல்லவில்லை என்று இருக்க.. ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். இங்கு நூருல் அமீன் அவர்கள் கூட அப்படி சொல்லவில்லையே.. விளங்காமல் ஏன் கேள்வி கேட்கிண்டீர்கள்...

நமக்கு கிடைத்த குர்ஹனும், ஹதீஸ் கூட வாழையடி வாழையாக தான் நம் இடம் கிடைத்தது. என்பதை கவனத்தில் வையுங்கள்...


எனவே உங்கள் முழு செய்தியும் தவறு முதலில் மௌலான நூருலமீன் என்ன சொல்கின்றங்கள் , இன்னும் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை முழுமையாக படித்த பின் உங்கள் கேள்விகளை கேளுங்கள்....

----------------Part 2-----Mohammed Kaleemullah

Anonymous said...

--------------------part 3------Mohammed Kaleemullah
" எவன் ஒருவன் எனது வலிமார்களை நோவினை செய்வானோ, அவன் என்னுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்துக்கொள்ளட்டும்" என்ற இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.""


மேற்சொன்ன ஹதீஸை கவனியுங்கள் :

முஹைதீன் அப்துல் கதர் ஜிலானி, காஜா மொய்னுத்தீன் , போன்ற பெரியார்களை குறை சொல்லும் நீங்கள் என்னக்கு பதில் சொல்லுங்கள் .....

நீங்கள் ஒருவரை அல்லாஹ்வின் வலி இல்லை என்று எதிர்கின்றீகள் அவர் அல்லாஹ்வின் நேசராக இல்லை என்றால் நீங்கள் தப்பித்தீர்கள்... ஆனால் நீங்கள் எதிர்க்கும் ஒருவர் அல்லாஹ்வின் நேசராக இருந்தால் நீங்கள் எதிர்ப்பது அல்லாஹ்வை தான் என்பதை ஆரிந்து கொள்ளுங்கள்... அல்லாஹ் விடத்தில் போர்புரிய தயாரா நீங்கள் ?????
உங்கள் கேள்விகள் அனைத்துமே தவறாகவே இருகிறது...
---------part 3------Mohammed Kaleemullah

Anonymous said...

----part 4--Mohammed Kaleemullah
உங்கள் கேள்விகள் அனைத்துமே தவறாகவே இருகிறது...
அல்லாஹ் சொல்கிறான்

..(நபியே!)... எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; யாரை அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17).


இந்த இறை வசனத்தில் முர்ஷத் என்று அல்லாஹ் சொல்வது நபியை அல்ல என்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

இந்த இறை வசனத்தில் அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதை கவனியுங்கள் :

""யாருக்கு அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்..""
அதாவது அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினால் மட்டும் தான் ஒருவர் நேர்வழி பெற முடியும் என்று விளங்க வேண்டும்
அடுத்த வரியில்
""யாரை அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ""
என்று சொல்கிறான் அதாவது அல்லாஹ் வழிகேட்டில் செலுத்தினான் என்று சொல்ல வில்லை விட்டு விட்டான் என்று சொல்கிறான்... ஏன் என்றால் அல்லாஹ் யாரையும் வழிகேடுப்பதில்லை என்று அர்த்தம்...
அவரர் தாம் வழிகேட்டை தேடிகொல்கிரார்கள்.. என்று அர்த்தம்..

மேலும்
""அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்""

இங்கு நேர்வழி என்று எதை அல்லாஹ் சொல்கிறான் என்று கவனயுங்கள்...
அதாவது ""அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்"" என்று சொல்கிறான்.. அதாவது நேரான வழி அல்லாஹ் தான் தர வேண்டும் ஒரு வலியே முர்ஷித் மூலமாக என்று அர்த்தம்...


உங்கள் வாத படி
//////// "நேர்வழி கொடுப்பது... கொடுக்காமல் இருப்பது எல்லாம் என் பொறுப்பு... உனக்கு அதில் எந்த பவரும் இல்லை" என்று..!/////////


உங்கள் வாத படி நேரான வழியை அல்லாஹ்வே தர வேடியது தானே ஏன் ஒரு வலியே முர்ஷிதை இடையில் அல்லாஹ் கொண்டுவர்கின்றான்..பதில் சொல்லுங்கள்?????

demha,முஹம்மத் ஆஷிக் citizen of world ,NAGORE FLASH , G u l a m ஆரப்பதில் இருந்தே உங்கள் வாதம் முற்றிலும் தவறு. உங்களுக்கு தான் அணைத்தும் தெரியும் என்பது போல் கேள்வியை கேட்காதீர்கள். அல்லாஹ்விற்கு பயந்து உங்கள் வார்த்தையை பதியுங்கள்.
----part 4--Mohammed Kaleemullah

Nizam said...

Mohammed Kaleemullah @
//உங்கள் வாத படி நேரான வழியை அல்லாஹ்வே தர வேடியது தானே ஏன் ஒரு வலியே முர்ஷிதை இடையில் அல்லாஹ் கொண்டுவர்கின்றான்..பதில் சொல்லுங்கள்?????//
எனக்கு ஒருவார் நேர்வழி காட்டிகிறார் என்று வைத்துகொள்வோம். அதற்காக அவர்க்காக நன்றி சொல்லாம் இல்லை அவர்க்காக துஆ செய்யலாம். அவர் உயிரோடு இருந்தா அவர்க்கு அன்பளிப்பு கொடுக்களாம். அதை விட்டுபுட்டு செத்துபோனவார்களிடத்தில் காலகாலத்துக்கும் குழந்தைகொடு, வீட்டை கொடு, காட்டை கொடு, பத்தி கொழுத்திரதும். சந்தனகூடு நடத்திரதும். உண்டியல் காணிகை கொடுக்கிறாதும். நல்லருக்கா இதனாலதான் நபி(ஸல்)க்கு இதுபோன்ற செயல்களை முஸ்லீம்கள் செய்யபடுவதில்லை. அவரே தெளிவ சொல்லிட்டு மரணித்துவிட்டார். நிங்கள் செய்தல் தடுக்க நாங்கள் யாரு உங்களுக்கு இது தவறுன்னு விளக்கம் தான் தரமுடியும். நிங்கள் திருந்தினால் எங்களுக்காக துஆ செய்யுகள் அது போதும் அல்லாஹ் எங்களுக்கு கூலி கொடுப்பான்.

புல்லாங்குழல் said...

அன்பு சகோதரர் நிஜாம்,

தயவு செய்து இந்த கட்டுரையை மீண்டும் ஆழ்ந்து வாசியுங்கள். எனது தவ்ஹூது, தஸவுஃப் பற்றிய சில விளக்கங்கள் கட்டுரையையும் வாசியுங்கள்.(http://onameen.blogspot.com/2010/10/blog-post_13.html
அதில் முன் வைத்துள்ள கேள்விகளை சிந்தியுங்கள்.
நபி வழியில் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் தவ்ஹீது, ஷிர்க் விளக்கத்தை பெற முயலுங்கள்.
நாம் ஒருவருக்கொருவர் துவா செய்வோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன்!

HM Rashid said...

//They make the atheist question, “if the world needs a creator, then why not the creator?” impossible to answer in a logically consistent manner, because if the shapes of the world need a creator, then why not all shapes?//
இது போன்ற ஓரிரெண்டு கேள்விகள் போதும் ,இன்னார் வலி,நல்லடியார் ,என்பதற்க்கு என்ன ஆதாரம் என்று கேட்டு சேதாரமாகிபோகுபவர்களுக்கு!!!மேலும் அறிவாலிகளுக்கு தெரியும் வானமண்டலத்திலுல்ல விண்மீண்களை அளப்பதற்க்கு நம் கையில் உள்ள ஸ்கேல்,மீட்டர் டேப் போன்றவை உதவாது என்பது!!!HMR

nagoreismail said...

Just read.. May Allah bless you Janab Kaleemullaah..

Qaseeda Tk said...

மாஷா அல்லாஹ் நல்ல விளக்கம்