தோழமையுடன்

Wednesday, February 29, 2012

நட்பு எனும் கற்பு


எனக்கு மிகவும்  நெருக்கமான பள்ளித் தோழன் ஸ்டீவன் ராஜ், இந்த அருமையான குட்டி கதையை மின்னஞ்சல் அனுப்பி இருந்தான். 'இருந்தான்' என்பது நெருக்கத்திற்காக மற்றபடி  ஸ்டீவன் ராஜ் மேனேஜ்மென்டில் டாக்டர் பட்டம் பெற்ற, ரயில்வேயில் மேனேஜ்மென்ட் பாடம் எடுக்கும் ஓர் உயர் அதிகாரி.

என்னை மிகவும் யோசிக்கவைத்த படிப்பினையூட்டும் இந்த குட்டிக் கதை உங்கள் சிந்தனைக்கு...

ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த தீவு ஒரு பாலைவனம் போல இருந்தது.

அந்த இருவரும் மிகவும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர். அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு நல்ல சக்தி இருக்கிறது பார்ப்போம் என்று முடிவு செய்தனர், அதன்படி அந்த தீவை இரண்டாக பிரித்து அதில் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர்.
முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனைபடி ஒருவன் நிலத்தில் பலவிதமான பழமரங்கள் வந்தன. அதை அவன் சாப்பிட்டான் ஆனால் மற்றவன் நிலமோ தரிசு நிலமாகவே இருந்தது.அவன் பசியோடு இருந்தான்.

பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான் அவனது வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த படகு உடைந்து அதில் இருந்த ஒரு பெண் மட்டும் உயிர்தப்பி அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள்,தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.


முதல் மனிதன் செய்த வேண்டுதல்படி நல்ல உணவுகள்,துணிகள், நல்ல வீடு எல்லாம் மேஜிக் போல வந்தன. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை.அவன் உருக்குலைந்து போனான்.இப்படியாக ஒருவாரம் கழிந்தது

இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான்.அதுவும் அடுத்தநாள் வந்தது. முதல் மனிதன் தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். அவன் நினைத்தான் தன் நண்பன் ஓன்றுக்கும் உதவாதவன் கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்கவில்லை அவனுடைய பிரார்தனைகளில் ஓன்று கூட கடவுள் நிறைவேற்றி வைக்கவில்லை. அதானல் அவனை அழைத்து செல்ல அவனுக்கு இஷ்டமில்லை,

அப்போது அந்த போட்டு கிளம்ப தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது "ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்?" என்று அந்த குரல் கேட்டது.

அதற்கு அந்த மனிதன் சொன்னான், "நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்தனை ஓன்றுக்கும்கூட கடவுள் செவி சாய்க்கவில்லை.அவன் ஓன்று கூட பெற தகுதியில்லாதவன்!" என்று சொன்னான்.

அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது, "மகனே! நீ நினைப்பது தவறு. உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஓன்று மட்டும் கேட்டான். அந்த பிரார்த்னையையும் நான் நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்தவித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்து இருக்காது".

அந்த மனிதன் கேட்டான் "சொல்லுங்க அப்படி அவன் என்ன பிரார்த்தனையில் கேட்டான்? நான் அவனுக்கு கடமை ஏதாவது பட்டிருக்கிறேனா?"

"உன் நண்பன் பிரார்த்தனையில் 'என் நண்பன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றிவை அதுபோதும் எனக்கென்று கேட்க எதுவும் இல்லை' என்றுதான் வேண்டினான்" என்றது அந்த குரல்.


நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே எல்லாம் நமக்கு கிடைத்து விடுவதில்லை.மற்றவர்களின் வேண்டுதல்களும் அத்ற்கு உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்களை யாராக இருந்தாலும் ஓதுக்கி வைத்துவிட வேண்டாம் & சந்தேகப்படவேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்.


இதை புரிந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் -THANKS FOR PRAYING FOR ME, ME TOO PRAYING FOR U.

 - Dr.ஸ்டீவன் ராஜ்

7 comments:

STEVE SPEAKS1 said...

nandri

புல்லாங்குழல் said...

ஸ்டீவன் ராஜ், நான் நன்றி என்று சொன்னால் எத்தனைக் கோபப்படுவாய் நீ! பின் ஏன் இந்த நன்றி!

Anonymous said...

My heart full congratulations to Mr.Stephen Raj. Beautiful message. God is always Great.

Prabahar , Dubai

Anonymous said...

Very nice story..

Anonymous said...

Very nice!!!TNX

Rashid-NGT

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு