தோழமையுடன்

Saturday, November 26, 2011

கடவுளுக்கு உருவம் இல்லை - வாரியார் சுவாமிகள்


கடவுளுக்கு உருவம் இல்லை என்பது தான் இந்து மத கொள்கை என்கிறார் வாரியார் சுவாமிகள்.  

அருட்கொடையாளர்கள் என்ற தலைப்பில் மகத்தான ஆளுமைகளைப் பற்றி ஆபிதீன் பக்கங்களில் தொடர் கட்டுரை எழுதி வரும் மஞ்சக்கொல்லை ஹமீது ஜெஹபர்அண்ணன் அவர்கள் தந்துதவிய தினமணி கட்டிங் இணைப்பு நன்றியுடன் கீழே தரப்பட்டுள்ளது.

  
உருவ வழிபாடு என்பது மனித நம்பிக்கையின் வடிவாக விவரிக்கிறார் வாரியார் சுவாமிகள். இந்து மதத்தில்  உருவ வழிபாடு வந்த வழியினை ஜெயமோகனின் இப்படி விளக்குகிறார்:

பொதுமக்கள் எப்போதுமே வழிபாடுகளையே அதிகமும் சார்ந்திருக்கிறார்கள். தத்துவம் கூட சடங்குகளாகவும் குறியீடுகளாகவும் உருமாறித்தான் அவர்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது. அடிப்படையில் சடங்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட பௌத்தம் சமணம் போன்ற தத்துவ மதங்கள்கூட வளர்ச்சிப்போக்கில் சடங்குகளையும் தெய்வ உருவங்களையும் உருவாக்கிக்கொண்டிருப்பதை நாம் காணலாம். 

பூர்வமீமாம்சம் என்னும் பிராமண மதம் முழுக்க முழுக்க சடங்குகளைச் சார்ந்தது. மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் அது பல்வேறு இனக்குழுக்களின் சடங்குகளையும் தெய்வங்களையும் தன்னுள் இழுத்துக்கொண்டு விரிவாக்கம் பெற்றுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் இந்து மரபின் வெகுஜனத் தளமே அதுதான் என்றாயிற்று. ஆகவே இந்து ஞானமரபின் எந்த ஒரு தத்துவத்தளமும் அந்த வெகுஜனத்தளத்துடன் சமரசம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது”.

டாக்டர் ராதா கிருஸ்ணன் தனது இந்தியன் பிலாஸபியில் கூறும் கருத்தும் கூட இதுவே. ஆரியன் என்பவன் பிறருக்கு தீங்கு தராதவன் என்னும் பொருளில் ஒரு பிராமண நண்பர் கூறுவதை கேட்டேன். இறைநம்பிக்கையாளன் என்பதற்கும் இதே பொருளைத் தானே இஸ்லாமிய மார்க்கமும் கூறுகின்றது என்பது நினைவு வந்தது.

ஆன்மீக போதனையில் ஒரு பொதுத் தன்மை இருப்பது உண்மை. ஆனால் புத்தர், சங்கரர், கிரேக்க தத்துவவாதிகள், கிருஸ்தவ ஞானிகள், இஸ்லாமிய ஞானிகள் என ஆன்மீகம் பேசும் பல்வேறு குழுவினர் ஒருவரையொருவர் தங்கள் கொள்கையை பிறர் காப்பி அடித்ததாக கூறுகின்றார்களே! இதில் யார் சொல்வது உண்மை? இந்த சுட்டியினை படித்து பாருங்கள்
No comments: