தோழமையுடன்

Saturday, November 26, 2011

நக்கீரர் குலாம் காதிறு நாவலர் - ஜே.எம். சாலி


'சமநிலைச் சமுதாயம்' இதழுக்கும், அதில் வந்த இந்த தகவலை மின்னஞ்சலில் அனுப்பிய  நண்பர் ஈமான் டைம்ஸ் முதுவை ஹிதாயத்துக்கும் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.
நக்கீரர் குலாம் காதிறு நாவலர் -  ஜே.எம். சாலி  


  ‘வித்தியா விசாரிணிமலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.


  ‘வித்திய விசாரிணிக்குப் பல எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அன்றைய இலங்கை இதழான முஸ்லிம் நேசன்கண்டனக் குரல் தொடுத்து வந்தது.


  ’வித்தியா விசாரிணிபின்னர் நாகூரிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் கவிதை, உரைநடை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறை அனைத்திலும் 19 ஆம் நூற்றாண்டில் முன்னணி வகித்தவர். பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்எனச் சிறப்பிக்கப்பட்ட நாகூர் குலாம்காதிறு நாவலரே அந்த இலக்கிய இதழியல் முன்னோடி.


  மொழிபெயர்ப்பு பணியில் 19 ஆம் நூற்றாண்டில் முத்திரை பதித்தவர் நாவலர். தமிழக முஸ்லிம் அறிஞர்கள் அரபு, பார்சி, உருது நூல்களை மொழியாக்கம் செய்து வந்த காலகட்டம் அது. நெடிய ஆங்கில நாவலை புதினத்தை தமிழில் மொழி பெயர்த்து அந்நாளில் தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தினார் குலாம் காதிறு நாவலர்.


  ஆங்கில நாவலின் பெயர் omar’ ஒமர். அதை எழுதியவர் ரைனால்ட்ஸ் (G.W.M.Reynolds ) அந்த வரலாற்றுப் புதினம் நாகூர் நாவலரை வெகுவாக ஈர்த்ததால் அதை மொழிபெயர்க்கத் தொடங்கினார். பக்கங்கள் பெருகிக் கொண்டிருந்தன. மொத்தம் 900 பக்கங்கள். அதனால் ஒரே தொகுப்பாக வெளியிட முடியவில்லை.  ‘உமறு பாஷா யுத்த சரித்திரம்எனும் தலைப்புடன் 4 பாகங்களாக 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார் நாவலர். 


நன்றி : சமநிலைச் சமுதாயம் நவம்பர் 2007


உமறு பாஷா யுத்த சரித்திரம்
 

உமறு பாஷாஎன்னும் பெயர், நாயகத் தோழர் கலீபா உமர் காலக்கட்டத்தில் நடந்த யுத்த சரித்திரமோ என்ற மயக்கத்தைத் தந்தாலும், உண்மையில் இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் துருக்கிப் பேரரசுக்கும், இரஷ்யப் பேரரசுக்கும் இடையே தொடர்ந்து பல்லாண்டுகள் நிகழ்ந்த போரினை மையப்படுத்தி அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரபல ஆங்கில வரலாற்று நூலாசிரியர் ரைனால்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்ட ஒமர்என்னும் ஆங்கில வரலாற்று நூலின் சிறப்பான மொழிபெயர்ப்பு எனும் ஹ.மு.நத்தர்ஷாவின் கட்டுரையை முழுமையாக படிக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள் :No comments: