புது கவிதை எழுத பயின்ற விதத்தை சுவராஸ்யமாக எழுதியுள்ளார் கவிஞர் தாஜ். தாஜ் எழுதும் கவிதைகளை விட சுவராஸ்மானவை அவரது கவிதைகளை பற்றிய கட்டுரைகள். அத்துடன் பிரம்மராஜன் அவர்களின் சுவையான பேட்டியையும் இணைத்து வ.ந. கிரிதரனின் 'பதிவுகள்' (டிசம்பர் 2006) இதழில் வெளியானது நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Sunday, June 3, 2012
Saturday, June 2, 2012
அன்பு சகோதரி அஸ்மாவுக்கு!
நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரி அஸ்மாவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாங்கள் கேட்டிருந்த கேள்விக்கு எழுத ஆரம்பித்த பதில் சற்றே நீண்டு விட்டதால் தனி இடுகையாய் பதிந்து விட்டேன்.
முந்தைய காலத்தில் ராபியா பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா போன்ற மகத்தான பெண்மணிகள் மார்க்க சேவையாற்றியுள்ளார்கள். இந்நாளில் பெண்கள் மார்க்க சேவைக்கு வருவது எவ்வளவு மகத்தானது!. அந்த வகையில் உங்கள் மார்க்கப் பற்றும், சேவையையும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தாங்கள் புல்லாங்குழலுக்கு வருகை தந்ததற்கு கூடுதல் மகிழ்ச்சி! நன்றி!
Friday, June 1, 2012
திரை விலகட்டும்!
ரகசியங்கள் பகிரங்கமாகும் மறுமை நாளில் இறைவன் பிரகடனம் செய்வான்:
“இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. (40:16)
மிஸ்காத்துல் அன்வார் எனும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இப்படி எழுதியுள்ளார்கள்.
இறைவனின் வஜ்ஹை(being) தவிர யாவும் அழிபவையாய் இருக்கின்றன. இந்த ஆத்ம ஞானம் பெற்றவர்கள், “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. என்று இறைவன் பிரகடனம் செய்வதை கேட்க மறுமை நாளில் எழுப்பப்படும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அந்த அழைப்பு சதாவும் அவர்களின் செவிகளில் ஒலித்த வண்ணமே இருக்கிறது” என்று.
Sunday, May 27, 2012
Subscribe to:
Posts (Atom)