தோழமையுடன்

Thursday, June 17, 2010

அகப்பார்வை அத்தியாயம் 4

மறைந்த பொக்கிஷம்
மறைந்த பொக்கிஷமாக இருந்தது அல்லாஹ்வின் அகத்தே அமைந்த அவனது அருளாளன் (ரஹ்மான்), உணவளிப்பவன் (ரஜ்ஜாக்), படைப்பவன் (காலிக்) முதலிய எண்ணற்ற திருநாமங்களும் (அஸ்மாக்களும்) அந்த திருநாமங்களுக்குரிய தெய்வீக குணங்களும் (சிஃபாத்துகளும்) தான். இந்த குணங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து உலூஹிய்யத் என்னும் இறைத் தன்மை, ருபூபிய்யத் என்னும் ரட்ஷகத்தன்மை கொண்ட குணங்கள் எனவும் கூறுவார்கள். இந்த திருநாமங்களுக்கும், தெய்வீக குணங்களுக்கும் உரிமையாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மகத்தான ஏகத்துவ ஞானத்தின் மையக் கருப்பொருளாய் இருக்கின்றது.


உலூஹிய்யத் :
இறைத்தன்மை (உலூஹிய்யத்) என்பது என்ன? யாரிடமும் எதற்காகவும் தான் தேவையற்ற நிலையில் இருந்து, தன் சர்வ கோடி படைப்புகளின் அனைத்துத் தேவையையும் பிறர் தயவின்றி தானே நிறைவேற்றும் தன்மைக்குப் பெயர் இறைத்தன்மை”. அப்படி தேவைகளை நிறைவேற்றக் கூடியவனுக்கு நான்கு அம்சங்கள் சுயமாக இருக்க வேண்டும் என இறையியல் அறிஞர்கள் வகுத்துள்ளார்கள். அவையாவன :
சுயமான உள்ளமை(தாத்): தேவையை நிறைவேற்றக் கூடியவனின் (இலாஹுடைய) உள்ளமை சுயமானதாக (Self Existent) தன்னைக் கொண்டே தான் இருக்க வேண்டும். தன் இருப்புக்குப் பிறரை சார்ந்திருப்பவன் அல்லது சார்ந்திருக்கும் ஒரு பொருள் பிறர் தேவைகளை சுயமாக நிறைவேற்றவே முடியாது.
சுயமான பண்புகள்(சிஃபாத்): உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு, முதலிய தேவைகளை நிறைவேற்றும் அடிப்படைப் பண்புகள் அவனுக்கே சொந்தமாக இருக்க வேண்டும்.
சுயமான செயல்பாடு (அஃப்ஆல்): சுய சக்தியுடையவனாக, சுயமாக செயல்படுபவனாக இருக்க வேண்டும்.
சுய உடமை (ஆஸார்): கொடுத்துக் குறையாத அகில உலகத்தின் ஏக போக அதிபதியாக இருக்க வேண்டும்.
இந்த நான்கு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு தான் படைத்த சிருஷ்டிகளின் அனைத்துத் தேவைகளையும் ஹிக்மத் என்னும் நுண்ணறிவோடு நுணுக்கமாக அறிந்து நிறைவேற்றக் கூடியவன் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர என்பது தான் திருக்கலிமாவில் அடங்கியுள்ள உலூஹிய்யத் என்னும் இறைத் தன்மையின் சுருக்கமான விளக்கம். இதை இன்னும் சுருக்கமாகச் சொன்னால் சுயமாக இருப்பவன், இயங்குபவன், வழங்குபவன், வாழவைப்பவன் இறைவன், இடைவிடாமல் ஒவ்வொரு வினாடியும் அவன் தயவால் இருப்பவை, வாழ்பவை சிருஷ்டிகள்.
உள்ளமை இன்னும் உயிர், அறிவு முதலிய தன்மைகள், சக்தி, பொருளாதார உடமை ஆகிய இறைத்தன்மையின் நான்கு அம்சங்களும் சிருஷ்டிகளிலும் காணப்படுகின்றது. சிருஷ்டிகள் சுயமாக இருப்பது போல் காட்சியளிக்கின்றது. அவைகளில் உயிர், அறிவு முதலிய தன்மைகள் உணரப்படுகின்றது. சக்தி கொண்டு செயல்படுகின்றது. பொருளாதார உரிமையுடன் ஆளுமை செய்கின்றது. ஆனால் அவை சிருஷ்டிகளுக்கு சொந்தமானவையல்ல. அந்த சிருஷ்டிகளை வாழவைக்க இறைவன் இரவலாக அருளிய இணையில்லா கருணையின் விளைவது. அந்தக்கருணை மட்டும் வெளியாகவில்லையென்றால் உலகில் காண்பதற்கு எந்தக் காட்சியும் இல்லை, சாட்சியுமில்லை. அல்லாஹ்வுடைய கருணை (ரஹ்மத்) அனைத்து சிருஷ்டிகளையும் சூழ்ந்துள்ள மிக நுட்பமான விஷயமது. இப்படி ரஹ்மத்தைக் கொண்டு ரஹ்மான் எப்படித் தன் ஈடு இணையில்லா கருணையால் அனைத்தையும் சூழ்ந்துள்ளான் என்ற சூட்சுமத்தை அறியத்தான் ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள் என திருக்குர்ஆன் நமக்கு வழிகாட்டுகின்றது.
இந்த ஏகத்துவ ஞானம் இல்லாதவர் இந்த இறைத்தன்மைகளை சிருஷ்டிகளுக்குச் சொந்தப்படுத்துவார். ஆனால் ஏகத்துவ நம்பிக்கையின் அடிப்படையில் தன் பார்வையை ஆக்கிக் கொண்ட நம்பிக்கையாளர் சிருஷ்டியே! நீ என் தேவையை சுயமாக நிறைவேற்றவில்லை. ஏனென்றால் நீயே சுயமாக இல்லை, அதனால் உன் தன்மைகளும் சுயமாய் இல்லை! உன்னில் காணப்படும் செயலாற்றலும், உடமைகளும் உனக்குச் சுயமாய் இல்லை. ஏதும் சுயமற்ற உன்னால் இறைவனின் தயவின்றி எந்தத் தேவையையும் நிறைவேற்ற முடியாது. உன்னுடனும், மற்ற சிருஷ்டிகளுடனும் தன் சொந்த உள்ளமையைக் கொண்டு ஏகமாய் உடன் இருந்து தன் தனித்த (unique) உள்ளமை, பண்புகள், செயல்கள், உடமைகளால் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் தான் உங்கள் போர்வையில் எனது தேவையை நிறைவேற்றியவன்என எங்கும் சூழ்ந்திருக்கும் அவன் இறைத்தன்மையை ஒன்று படுத்துவார். தவ்ஹீத் - ஏகத்துவம் என்பது தவஹ்ஹுத் ஒன்றுபடுத்துவது என்பதிலிருந்து வந்தது. அல்லாஹ் ஒருவன் (ONENESS OF ALLAH) என்பதல்ல தவ்ஹீத். அல்லாஹ் என்பது பலர் என யாரும் கூறவில்லை. தேவையை நிறைவேற்றும் இறைத் தன்மை (உலூஹிய்யத்) பல சிருஷ்டிகளில் காணப்படுகின்றது. அந்த இறைத்தன்மைக்கு (உலூஹிய்யத்துக்கு) சொந்தக்காரனான இலாஹ் ஒருவன் (ONENESS OF ILAH) என்பது தான் தவ்ஹீத். இப்படி ஒன்றுபடுத்திக் காட்டுவது தான் நபிமார்களின் முதன்மையான பணியாய் இருந்தது.
கோடிக்கணக்கான சிருஷ்டிகளில் இந்த இறைத்தன்மைகள் வெளிப்பட்டாலும் அவை அந்த அனைத்து சிருஷ்டிகளையும் தன் உள்ளமையால் அடைய வளைய சூழ்ந்தவனாக (குல்லு ஷையின் முஹீத்தாக) விளங்கும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம். (வானம் பூமியில்) இலாஹ்வாக இருப்பது (அல்லாஹ்வா¸¢Â) ஒரே இலாஹ் தான் إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ ( 16:22 ) என்பதால் அவன்பால் தன் வணக்கத்தை சமர்பித்து தொழுகையில் நிற்கும் போது “(அனைத்து சிருஷ்டிகள் மூலமாகவும் என் தேவைகளை நிறைவேற்றிய) உன்னையே வணங்குகின்றேன் (எல்லா சிருஷ்டிகளின் மாறலாகவும் தேவையை நிறைவேற்றக்கூடியவனாக இருக்கும் ஏகனாகிய) உன்னிடமே உதவி தேடுகின்றேன்என தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். இதற்கு மாறலாக ஒன்றுபடுத்துவதுஎன்றால் அல்லாஹ்வும் சிருஷ்டியும் ஒன்று என ஒன்றுபடுத்தி, ‘எல்லாம் அவன்’, ‘எல்லாம் அவன் செயல்என்று யாராவது கூறினால் அது நபிமார்கள் காட்டித் தந்த ஏகத்துவமல்ல அதற்கு மாறான ஒருவகை வழிகேட்டைச் (இல்ஹாதே மஃனவி) சார்ந்தது. படைப்பினங்கள் எந்த நிலையிலும் இறைவனல்ல. தேவையே உருவான இறையடிமைகள். இறைவனோ என்றும், எவரிடமும் தேவையற்றவன்.
يَا أَيُّهَا النَّاسُ أَنتُمُ الْفُقَرَاء إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
மனிதர்களே நீங்கள் (எல்லா நிலையிலும், எல்லா விஷயங்களிலும்) அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ (எக்காலத்திலும், எவரிடத்திலும்) தேவையற்றவனாகவும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்”.(35:15)
நமக்கு உப்புப் போன்ற சிறிய பொருளின் தேவையா? தன்னிடமே கேட்கச் சொல்கின்றான். அறுந்த செருப்பு வாரை சரி செய்யும் சிறிய செயலின் தேவையா? தன்னிடமே கேட்கச் சொல்கின்றான். நம் இருப்பை உணர்த்தும் உயிர் இன்னும் அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு முதலிய தன்மைகள், நம் இயக்கம் மற்றும் நமக்குத் தேவையான அனைத்து வாழ்வாதாரங்களுக்கும் இடைவிடாது நாம் அல்லாஹ்வையேச் சார்ந்திருக்கின்றோம்.
أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ
என்ன இந்த அடியானுக்கு அல்லாஹ் போதுமானவனாக இல்லையா?”(39:36) என அல்லாஹ் கேட்கின்றான்.
அவனைத் தவிர இன்னொருவர் சுயமாக ஒரு அற்பத் தேவையை தன் தானாக நிறைவேற்றிக் கொள்ளவோ அல்லது பிறருக்கு நிறைவேற்றவோ முடியும் என்றால் அல்லாஹ் இந்த கேள்வியை எழுப்ப மாட்டான்.
புலன் உணர்வு சார்ந்த புறப்பார்வையையும், பகுத்தறிவு சார்ந்த அனுபவ நம்பிக்கையை மட்டுமே கொண்டு இந்த மகத்தான உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூட தன் சொந்த ஆராய்ச்சியின் மூலம் இந்த இறைஞான கருத்துகளை முன் வைக்கவில்லை. இறைவன் வஹி என்னும் வேத வெளிப்பாட்டின் மூலம் இந்த ஏகத்துவ ஞானத்தை - மறைவான ஆதி ஞானத்தை மன்னர் முஹம்மதரின் சங்கைமிகு இதயத்தில் இறக்கி வைத்து மானிட குலத்திற்கு ஒரு தெளிவான ஆதாரமாக்கிவிட்டான்:
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءكُم بُرْهَانٌ مِّن رَّبِّكُمْ وَأَنزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُّبِينًا
மனிதர்களே! உங்கள் ரப்பிடமிருந்து (உறுதியான) ஆதாரம் உங்களுக்கு வந்து விட்டது. தெளிவான ஒளியையும் நாம் இறக்கி வைத்துள்ளோம்”. (4:174 அல் குர்ஆன்)
நபிகள் பெருமான் (ஸல்) «Å÷¸û அல்லாஹ் ஏற்றி வைத்த தன் அக ஜோதியை தன்னைப் பின்பற்றிய அனைவருக்கும் வாரி வழங்கி அல்லாஹ் என்ற உண்மை உதவியாளனை (ÓÉ£§Á †ì¸£ì¸¢), மகத்தான நேசனை மிக மிக நெருக்கமாக திரும்பும் திசையெல்லாம் அகப்பார்வைக்குக் காட்டித் தந்தார்கள்.
அந்த ஏகத்துவ வழிகாட்டுதலினால் பயன் பெறாத நிராகரிப்பாளர்களை பற்றிக் கூறும் போது மறுமையில் இந்த உண்மை விளங்கிவிடும் என்ற அமைப்பில்:
அல்லாஹ்வையன்றி எந்த நேசனையும், உதவியாளனையும் (நிராகரிப்பாளர்களான) அவர்கள் (மறுமையில்) காணமாட்டார்கள்”. (4:173) என கூறுகின்றான்.
«øகுர்ஆன் என்னும் தெளிவான ஆதாரத்தையும், அதன்படி அமைந்த இறைஞானம் என்னும் ஒளியையும் நபி வழியில் முறையாக பெற்றுக் கொண்ட நம்பிக்கையாளர் தன் அகப்பார்வையால் இறைவ¨Éயன்றி, எந்த உண்மை நேசனையும், உதவியாளனையும் இம்மையிலும் காணமாட்டார். சிருஷ்டிகள் சுயமாக இல்லையென்பதை உணர்ந்த இறைநம்பிக்கையாளர் எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம் இருக்கின்றது என்ற மறை வழி நம்பிக்கையால் புறக்கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் தன் அகப்பார்வையால், “நிச்சயமாக நான் வானங்களையும், பூமியையும் படைத்த ஒருவனின் (உள்ளமையின்) பக்கம் என் முகத்தைத் (கவனத்தை) திருப்பி விட்டேன். நான் ஏகத்துவநேசன் (ஹனீஃப்), நான் இணைவைப்பவர்களில் சேர்ந்தவன் அல்ல” (6:79) என ஏகத்துவ சாட்சியாளனாகி விடுகின்றார்.
ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறுத்தவர் போலவோ, இல்லை, மறந்தவராகவோதான் நம் பொழுது கழிகின்றது! அதற்குக் காரணம் என்ன? திருமறையை ஓதும் போது ஒப்புக் கொள்ளும் இந்த உண்மைகளை நாம் முறையாக ஆராய்ந்து தெளிவாக விளங்காததால் அது நம் உறுதியான இறைநம்பிக்கைஎன்ற எல்லையை எட்டவில்லை.
ஈமான்(இறை நம்பிக்கை) கொண்டவர்களே! அல்லாஹ்வின் (இறைவன்) மீதும் ரசூலின் (இறைத்தூதர்) மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளுங்கள்”. (4:136)
அது என்ன நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்கள் பெற வேண்டிய இன்னொரு நம்பிக்கை(ஈமான்)? கேள்வி ஞானத்தின் மூலம் நம்பிக்கை கொண்ட (தக்லீதியான) நிலையிலிருந்து ஆய்ந்து அறிந்து உண்மையை உணர்ந்து நம்பிக்கை கொண்ட (தஹ்கீகியான) நிலைக்கு வாருங்கள் என்று இறைவன் அழைக்கின்றான். உலூஹிய்யத் பற்றி மேலும் படித்தறிய ஆர்வமுள்ளவர்கள் கடையநல்லூர் ஹாபிஸ் மவுலவி M.S.அப்துல் காதர் பாகவி ஹஜரத் அவர்கள் எழுதிய திருக்கலிமாவின் பொக்கிஷம்என்ற நூலைப் பார்க்கவும்.
ருபூபிய்யத் :
அடுத்ததாக ருபூபிய்யத் என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம். ருபூபிய்யத் என்பது ஆரம்ப நிலையில் (primitive stage) குறைவுள்ள(நாக்கிஸான) ஒன்றை அதன் அமைப்பின்படி சன்னம் சன்னமாக ( stage by stage ஆக) நிலை மாற்றி அதன் உச்சத்தை அடையச் செய்யும் தன்மை. இன்னும் சொன்னால் நம்முடன் இருந்து நம்மை ஊட்டி வளர்த்து பக்குவப் படுத்தி, போஷித்து உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும் இணையற்ற தாய்மையது.
காலிக் (படைப்பவன்), ராஜிக் (வாழ்வாதாரமான உணவு, உடை, இருப்பிடம் இன்னும் அனைத்தையும் வழங்குபவன்), முஸவ்விர் (வடிவமைப்பவன்) முதலான அல்லாஹ்வின் ரட்ஷகத் தன்மை வாய்ந்த குணங்கள் அல்லாஹ்விடம் தன்னைக் கொண்டு பயன் பெறக் கூடிய சிருஷ்டியை - அதாவது ருபூபிய்யத்தை அனுபவிக்கக் கூடியவனை வெளியாக்கு என்று தன் உள்ளே மறைந்திருக்கும் திறமைகள்என்ற நாவினால் கோரியது.
இதை இவ்வாறு விளங்குவோம். ஒரு மனிதனிடம் ஓவியம் வரையும் திறமை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த ஓவியத்திறமை என்ன செய்யும்? அவனை ஒவியம் வரையத் தூண்டும். ஓவியம் படைக்கப்படும் போது அல்லது வெளிப்படும் போது அதில் ஓவியன் என்ற அவன் திறமை வெளியாகின்றது. அதாவது ஒரு வகையில் ஓவியத்தில் ஓவியன் வெளியாகின்றான்.
அல்லாஹ் தன் திருநாமங்களின் தெய்வீக குணங்களை அறியப் பட - வெளியாக்க நாடினான். வெளியாவதற்கு இடம் - தளம் வேண்டுமல்லவா? அத்தகைய வெளியாகுமிடமாக (úஹராக)வும், அப்படி வெளியாகும் தன் தெய்வீகக் குணங்களால் ஊட்டி வளர்க்கப்படுபவர்களாக (மர்பூபாக) - பயன் பெறுபவர்களாக சிருஷ்டிகளைப் படைத்தான்.
படைப்பு துவங்கியதும் தெய்வீக குணங்கள் வெளியானது அதனால் வளர்க்கப்படும் சிருஷ்டிகளும் வெளியானது. ஐம்புலன்களால் உணரக் கூடிய அத்தனை பொருள்களிலும், அத்தனை வகையிலும் ரஹ்மான் தன் கருணை வெள்ளத்தைக் கொண்டு பகிரங்கமாகச் சூழ்ந்து நிற்கின்றான்.
وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِن قُرْآنٍ وَلاَ تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلاَّ كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ
எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை. இந்த குர்ஆனிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை. செயலில் நீங்கள் எதையும் செய்வதுமில்லை. நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் போது நாம் சாட்சியாளர்களாக (ஷுஹூதன்) இருந்தே தவிர (10:61)
பொதுவாக சாட்சியாளன் என்பவன் சம்பவ இடத்தில் பிரசன்னமாக இருந்து நடந்ததைத் தெளிவாய்ப் பார்த்தவன். மகத்தான சாட்சியாளனான இறைவன் நம் பிடரி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான்.” இன்னும் அனைத்து சிருஷ்டிகளையும் ஆரம்பம், இறுதி, வெளிரங்கம், உள்ரங்கமென அடைய வளைய தன் உள்ளமையினால் (நூரினால்) சூழ்ந்தறிக்கின்றான்.
இப்படி நம்முடன் மிக நெருக்கமாக (அக்ரபாக) இருந்து நம் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் அவனை அறிந்து வணங்கவே இன்ஸானை (மனிதனை) அல்லாஹ் படைத்தான். இன்ஸான் என்றால் கண்மணிஎன்றொரு அர்த்தமுண்டு. காணக் கூடிய கண்மணிஎன்ற பொருள் வாய்ந்த பெயர் மனிதனுக்கு எத்துனைப் பொருத்தம். எல்லா புகழும் இறைவனுக்கே (அல்ஹம்துலில்லாஹ்!). அந்தக் கண்மணிக்கு அதன் பார்வை ஒளியை வழங்கவே நபிமார்கள்என்ற ஒளிவிளக்குகளின் மூலம் வேத வெளிச்சத்தை வழங்கினான்.
إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَن كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ
நிச்சயமாக எவருக்கு (அகப்பார்வை கொண்ட) இதயம் இருக்கின்றதோ அவருக்கு அல்லது மன ஓர்மையுடன் செவிசாய்க்கின்றாரோ அவருக்கு இதில் (இறை அத்தாட்சிகளில்) ஞாபகமூட்டல் (reminder) இருக்கிறது. அல் குர்ஆன் (50:37)
ஞாபகமூட்டல் என்றால் என்ன பொருள்? எந்த விஷயம் ஞாபகமூட்டப் படுகின்றதோ அந்த விஷயம் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று ஆனால் மறந்துவிட்டது என்று தானே பொருள்!
இது தான் என் தாய், இது தான் என் தந்தை, இது தான் என் பிள்ளை என்பதை விட அல்லாஹ் தான் என்னுடனிருந்து என்னை இயக்கும், வளர்க்கும் ரப்பு என்பது அனைத்து உயிர்களும் அறிந்த உண்மை. இந்த பூவுலகிற்கு நாம் வருவதற்கு முந்திய ஆன்ம உலகம் (ஆலமே அர்வாஹ்) என்ற நிலையில் நாம் இருந்த போதே இந்த அடிப்படை அறிவு நம் நாட்டதேட்டமின்றியே (இழ்திராரி) இறையருட் கொடையாய் அனைவருக்கும் வழங்கப் பட்டுவிட்டது. ஆனால் இன்று ஒருவர் முஸ்லிம், ஒருவர் இந்து, ஒருவர் கிருத்தவர் இன்னுமொருவர் நாத்திகர் என குழுக் குழுவாய் பிரிந்து நிற்கின்றோம்.. கொள்கை பேதமற்ற ஆன்ம நிலையில் நாம் எல்லோருமே அல்லாஹ் என்ற ஏகப் பரம்பொருளின் ரட்ஷகத்தன்மைக்கு ஓரணியாய் நின்று சாட்சி சொன்னவர்கள் தான் என்பதைப் பின் வரும் மறைவசனம் சுட்டிக்காட்டுகிறது.
(நபியே!) உம்முடைய ரப்பு (மனித இனத்தின் ஆதி பிதாவான) ஆதமின் மக்களாகிய அவர்களது (தந்தையின்) முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, (அவர்களை நோக்கி,) “நான் உங்கள் ரப்பு அல்லவா?” (என்று கேட்டான்) ஆம். “நாங்கள் (அதற்கு) சாட்சி கூறுகின்றோம்என்று அவர்கள் சாட்சி கூறியதை (நீர் அவர்களுக்கு) நினைவூட்டும், ஏனென்றால் நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. (7:172)
அவனை அறிவதற்காக மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய முதல் அருட்கொடை ஆன்மா - ரூஹ். ஆரம்ப அறிவு அல்லாஹ் தான் ரட்ஷகன் - ரப்புஎன்பது நாம் ரப்பைப் பார்த்து சொன்ன சாட்சி. .இந்த அறிவு மட்டும் வழங்கபட்டிருக்கா விட்டால் ஒரு வேளை மறைவான நம்பிக்கை நம் மேல் கடமையாகி இருக்காது. அப்படி ஆன்ம நிலையில் ரப்பு என்று ஒத்துக் கொண்ட நம்மை அவன் ரட்ஷகத்தன்மையை புலன் உணர்வுகளால் சுவைப்பதற்காகத் தான் உடலைத் தந்தான்.
வாழ்வின் போக்கில் நாம் சந்திக்கும் மனிதர்கள், சூழ்நிலைகள் ஏற்படுத்தும் அனுபவங்களின் தாக்கத்தில் நம் வாழ்வின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுபவனாக, நம்மை வளர்பவனாக இறைவன் இருப்பதை நாம் மறந்தே போய்விடுகின்றோம். அன்பு, நிம்மதி முதலிய அனைத்துத் தேவைகளையும், இறை தயவின்றி சிருஷ்டிகள் சுயமாகத் தருவதாக எண்ணுகின்றோம். அதனால் அந்தச் சிருஷ்டிகளைச் சந்தோசப் படுத்தவே நம் வாழ்நாளை அர்ப்பணிக்கிக்றோம். சிருஷ்டிகளை அல்லாஹ் தன் குடும்பம் என்கின்றான். சிருஷ்டிகளைச் சந்தோஷப்படுத்துவது இறைவனுக்கு மிக மிக பிரியமான விஷயம்!. அதனால் தான் மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவு ஊட்டுவதை கூட ஒரு நன்மைக்குரிய செயல் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் நம்முடைய அர்ப்பணம் எப்படி இருக்கிறது?
இறைவன் தடுத்த பாவங்களைக் கூட செய்து சிருஷ்டிகளை திருப்தி படுத்த முனைகின்றோம். இப்படி யாருடைய øவாழ்வுக்காக இறைவனை மறந்து நாம் பாடுபடுகின்றோமோ அந்த மனைவி, மக்கள், சுற்றம் யாராயிருந்தாலும் அவர்களும் தேவையுடையவர்கள். அவர்களின் அடிப்படைத் தேவை இன்னும் சுயநலம் பாதிக்கப் பட்டால் நமக்கு எதிராய் மாறிவிடுவார்கள் என்பது மறுக்க விரும்பினாலும் முடியாத நிதர்சனமான உண்மை. இப்படி வீட்டில், அலுவலகத்தில், ஊரில் திடீர் திடீரென நிகழும் எதிர்பாராத நிகழ்வுகள் நம் மனதின் அமைதியைக் குலைத்துக் கொண்டே இருக்கின்றன. பரபரப்பான உலக வாழ்க்கை மேலும் நம்மை மன நெருக்கடியில் தள்ளுகின்றது. விவரிக்க முடியாத தனிமையில் மனித மனம் அதன் சமநிலையை (equilibirium) இழந்து தள்ளாடுகின்றது. மனிதன் மிருகமாகி விடுகின்றான். தனிமனிதனின் அமைதிக் குலைவு வீட்டையும் நாட்டையும் அமைதியிழக்கச் செய்கின்றது.
இப்படி தனிமனிதனிலிருந்து கிளம்பி அகிலத்தையே சீரழிக்கும் அமைதிக்குலைவைத் தடுக்கத் தான் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கினான். மனிதனே நீ ஒரு போதும் தனியாக இல்லை. ‘தேவைகள் இல்லாத இறைவன் உன் அனைத்துத் தேவைகளிலும் உன்னைப் பிரியாமல் இருந்து உனக்கு உதவிக் கொண்டிருக்கின்றான் என நம்மை இயக்கும் ரப்பு நம்முடன் இருப்பதை (மஈய்யத்தை) ஞாபகம் செய்து, மனம் அமைதி பெறத் தான் தன் கருணையினால் தொழுகையை நமக்கு கடமையாக்கினான். தொழுகைக்கு அழைக்கும் பாங்கோசைநம் காதலனின் அழைப்போசை. ‘சலாஹ்என்னும் தொழுகை என்பதே அனைத்து சிருஷ்டிகளை விட்டும் மனதால் அறுபட்ட நிலையில் தன்னலமற்ற தன் தலைவனிடம் தன்னை ஒப்படைத்து முற்றிலும் அவனைச் சார்ந்து உணர்வால் ஒன்றித்து நிற்கும் வஸல்என்னும் ஆன்மீக சங்கமத்திற்காக - சந்திப்புக்காகத் (மிஃராஜுக்காகத்) தான்.தொழும் போது, நின்ற நிலையில் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என நம்முடன் இருந்து நம்மை நிற்க வைத்திருக்கும் ரப்பைப் புகழுகின்றோம்.
அடுத்த நிலையான ருக்கூவிலும் சுப்ஹான ரப்பியல் அளீம்என நம்முடன் இருந்து நம்மை பணியவைத்த அவனை பரிசுத்தப்படுத்துகின்றோம்.
நிமிர்ந்ததும் உன்னை பணிபவனை உயர்த்துபவனே ரப்பனா! லக்கல் ஹம்துஎன புகழுகின்றோம்.
மீண்டும் சஜ்தாவில் என்னுடன் இருந்து என்னை வாழ வைக்கும் பரிசுத்தமே! உன்னையன்றி எனக்கு கதி வேறில்லை என சுப்ஹான ரப்பியல் அஃலாஎன அவன் பாதங்களில் முழுமையாய் சரணடைந்து விடுகின்றோம்.
ஆக நம் ஒவ்வொரு நிலையிலும் நம்முடன் இருந்து நம்மை நிலை மாற்றும் ரப்பை புகழுமாறு இறைவன் நமக்குத் தொழுகையை அமைத்துள்ளான்.
நமது மரணத்திற்குப் பிறகு மண்ணறையில் கேட்கப் படும் முதல் கேள்வியும் உன் ரப்பு யார்?’ என்பது தான். ஏன் உன் இலாஹ் யார்? என கேட்கப்படுவதில்லை? - இது உங்கள் யோசனைக்கு.
ஆக நமது ரப்பு யார்? ஒவ்வொரு வினாடியும் நம்மை வளர்ப்பவன். இந்த பூமிக்கு நாம் எதற்கு வந்திருக்கின்றோம்? நம் ஒவ்வொரு அசைவிலும் நம்மை வளர்க்கும் ஏக போக நாயனின் தெய்வீகக் குணங்களை சுவைப்பதற்கு. சுவைத்துச் சுவைத்து சாட்சி சொல்வதற்கு. அந்தக் கருணை மிகுந்த இறைவனின் ரட்ஷகத்தன்மையில் காதலால் மனம் பொருந்தி, அவன் விதித்த விதிகளின்படி - ஷரீஅத்தின்படி கட்டுப் பட்டு இன்பமாக, நிம்மதியாக வாழ்வதற்கு வந்திருக்கின்றோம்.
எங்கே புகழுக்குரிய செயல்கள் வெளிப்பட்டாலும் அந்தப் புகழ் அனைத்தும் அகிலத்தின் ரட்ஷகனாகிய (ரப்பாகிய) இறைவனுக்கே சொந்தம் என ஒவ்வொரு தொழுகையிலும் சாட்சி சொல்கின்றோம். அவனுடைய ரட்ஷகத் தன்மையை ஒவ்வொரு நொடியும் அனுபவித்து நன்றி பெருக்குடன் உள்ளம் உருக நின்று உணர்வுப் பூர்வமாய் சொல்ல வேண்டிய அந்தச் சாட்சி இன்று நம்மில் சடங்காய்ப் போனது ஏன்? நம் இதயம் அதன் ஆதி இயல்பான அகப்பார்வைத் (ஷஹிதான) தன்மையை இழந்து நிற்கிறது.
மறதி என்னும் திரை நம் மனக்கண்ணை மறைக்கிறது. கற்பனைத் திரைகளை கிழித்தூடுறிவிடும் அகப்பார்வை என்னும் அற்புத ஆயுதம் உபயோகப்படுத்தாமல் இருப்பதால் துருப்பிடித்துக் கிடக்கின்றது என்றால் அது மிகையாகாது.
மறதியினால் விளைந்த துருவைஅகற்றும் மாமருந்து இறைஞாபகம் என்னும் திக்ரு. திருநபியை நமக்கு அல்லாஹ் தந்ததும் நமக்கு நாம் மறந்த நம் பிறவி முறையை ஞாபகமூட்டத்தான். திருமறையை அல்லாஹ் தந்ததும் இறை வெளிப்பாட்டின் அமைப்பை சன்னம் சன்னமாக முறையான விளக்கத்தைக் கொண்டு நமக்கு ஞாபகமூட்டத்தான். ஞாபகம் என்பது அறிவின் விளைவு. அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? என்றும் பார்வையுடையவர்களும், குருடர்களும் சமமாவார்களா? என்றும் கேள்வி எழுப்புகின்றான் இறைவன். இப்படி அகக்கண் பார்வை வழங்கப்பட்டிருந்தும் தன்னை உயர்த்தும் தன் பிறவி ஞானத்தை மனிதன் வாழ்வின் போக்கில் எப்படி இழக்கின்றான் அதை மீட்கும் வழியென்ன என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

No comments: