தோழமையுடன்

Sunday, February 10, 2019

வாசிப்பின் அகமும் புறமும்


எழுதப்படாத கவிதைக்கு மொழிகள் கிடையாது

கவிதைகள் உள்ளிருப்பால் அரூபவாசிகள்

கவிஞனின் மொழியே கவிதையின் மொழியாகிறது

மொழிஎழுத்துவார்த்தைகள் எல்லாம் வெளிப்பாட்டின் சாதனங்கள்

கண்களால் வாசிக்கப்படும் வார்த்தைகளின் வழியே தான் இதயம் கவிதையில்
நுழைய  வேண்டும்

இதயத்தின் கவிதை வாசிப்பு ஆழ்மனப் பயணம்
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே!”
எனக் காதலிக்கு பாடும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கவிதைக்கும் பொருந்தும்.

கவிதைகளைச் சுவாசித்த அரபியா மண்ணில் இறைவேதம் இறங்கியதால் 

குர்ஆன் கவிஞர்கள் வியக்கும் கவிதைகளின் வடிவத்தில் இறங்கியது

வேதங்கள் இறைவனின் பேச்சு என்பதால் அதற்கு மொழிகள் கிடையாது

நபிகளின் மொழியே வேதங்களின் மொழியானது

வேதங்கள் புலன்களுக்கு மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொண்டோருக்காக
திறந்த அற்புத வாசல்

கண்களால் வாசிக்கப்படும் வார்த்தைகளின் வழியே தான் இதயம் வேதத்தில் 
நுழைய வேண்டும்.

வேதவாசிப்பும் ஆழ்மனப்பயணம்ஆழ்கடல் முத்துக் குளியல்

"(நபியே!) நீங்கள் கூறுங்கள்கடல் நீர் அனைத்தும் மையாக    இருந்து   என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால்,என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவேஇந்தக் கடல் மை அனைத்தும் செலவாகிவிடும்.
அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்சேர்த்துக்  கொண்டபோதிலும் கூட!"   (அல் குர்ஆன் 18:109). 


உருவங்கள்வடிவங்கள்நிறங்கள் எல்லாம் இறை வார்த்தைகளின் 
வெளிப்பாட்டின்  சாதனங்கள்

கண்களால் வாசிக்கப்படும் உருவங்களின் வழியே இதயம் உருவமற்ற 
இறையின்  அழகைப் பருக வேண்டும்

அந்த ஆழ்மன பயணத்தில் தக்வாவே வழிகாட்டி

இதயத்தின் கண்களுக்கு நீச்சலில் உதவும் கண்ணாடியும் அதுதான், சாகச பயணத்தின் கட்டுச்சாதமும் அது தான்

முள்ளில் சிக்காமல் ஆடையைக் காப்பது போல் 

இணைவைப்பில் சிக்காமல் இதயத்தைக் காக்கும் விழிப்புணர்வே 'தக்வா'

பிரபஞ்சத்தைக் கண்ணாடியாக்கி அவன் பேரழகை தரிசிக்கும் ‘இஹ்ஸான் தக்வா.

எல்லா எல்லை கோடுகளையும் அழித்து உள்ளும்புறமும் ஊடுருவி நிற்கும்  இறைமையின் தரிசனத்தில் ஒருமையின்இன்பமும்

வல்லமையின் சாட்சியாய் அவன் வெளியாக்கி வைத்த பிரபஞ்ச கோலத்தில்
இருமையின் நயமும் 

ஒருங்கே ரசிக்கும் அற்புதமான ஆழ்மன வாசிப்பு 'தக்வா'.





உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: