தோழமையுடன்

Thursday, May 5, 2011

இன்று நாகூர் கந்தூரி என்னும் ஏகத்துவ கொடி ஏற்றம்


இந்த கட்டுரை நாகூர் கந்தூரியைப் பற்றி அல்ல. ஏகத்துவம் பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியின் நினைவு கூறல். சத்தியத்தை நேசிக்கும் உங்களை திறந்த மனதுடன் படிக்க அழைக்கின்றேன். 

இலங்கையிலிருந்து ஒரு ஆன்மிக குரு (ஷெய்கு) துபாய் வந்திருந்தார்கள். முஹம்மது நபியவர்களின் மேல் புகழ்பாடும் ‘மவுலிதுன் நபி’ பற்றி உரையாற்றினார்கள். நானும் என் அலுவலக நண்பர்சிலரும் அந்த நிகழ்சிக்கு சென்றிருநதோம். மறு நாள் அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போது ஒரு அலுவலக நண்பர் கேட்டார், “நபியை புகழலாமா?” என்று. அவர் எதற்காக அப்படி கேட்கின்றார் என்பது தெரிந்ததால் வீண் சர்ச்சை வேண்டாமே என்று “ என்னை உட்டுடுங்க பாய்” என நழுவ முயன்றேன். அவர் விடுவதாய் இல்லை. அடுத்தது தர்காவுக்கு போகலாமா? என்றார். சரி வலிய வருகிறார் இனி விட மாட்டார் என தெரிந்து போனது. இந்த இனிய வாழ்க்கை முறையை காட்டித் தந்தவர்கள் நபி என்பதால், “நபியை புகழவில்லை என்றால் நமக்கு நாவு எதற்கு?” என்றேன். 
“சரி அது இருக்கட்டும் தர்காவுக்கு போகலமா?” என மீண்டும் கேட்டார்.
அடக்க ஸ்தலங்களுக்கு செல்லும் கப்ர் ஜியாரத்  நபிவழி ‘சுன்னத்’ தானே என்றேன்.
அவுலியாட்ட போய் துவா கேட்கலாமா? அது ஷிர்க் (இறைவனுக்கு இண வைத்தல்) இல்லையா? என்றார்.
நான் அவரிடம்,”செருப்பு வார் அறுந்தாலும் அல்லாட்ட தான் கேட்கனும். உப்புட தேவைன்னாலும் அல்லாட்ட தான் கேட்கனும்னு சொல்லுது நபி மொழி. உன்னையே வணங்குகின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்னும் குர்ஆன் வாசகங்களை ஒவ்வொரு தொழுகையிலும் ஓதுகின்றோம். ஆனால் ஒவ்வொரு தேவையையும் ஒவ்வொருவரின் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றோம். இப்ப சொல்லுங்க பாய் குர்ஆன் ஹதீஸ்படி எது ஷிர்க்? ஒரு செயல் ஷிர்க்கா இல்லையா என்பதை அளக்கும் அளவுகோள் என்ன?” என்றேன். நண்பர் தடுமாறினார்.
தர்காவுக்கு ஏன் போகனும் என்றார்?
“அவுலியாக்களின் தர்பாருக்கு சென்றால் எனக்கு தௌஹீது என்னும் இறை நம்பிக்கை உணர்வு அதிகமாகிறது” என்றேன்.
“என்ன சொல்றீங்க” என்றார் நண்பர்.
“குர்ஆன் ஹதீஸ்படி எது தௌஹீத்” என்றேன்.
“இறைவன் அருளால், ஒரு டீ வேணும்னாலும் அல்லாட்ட தான் வாங்கி குடிக்கின்றேன், குரான், ஹதீஸ் படி” என நான் சொன்னவுடன் நண்பர் மிகவும் குளம்பி போனார்.
0  0  0  0
சில வருடங்களுக்கு பின் துபாய் கோட்டை பள்ளியில் என் ஆன்மீக குருநாதரின் அன்பு மகனார் நூராணி ஷாஹ் ஹஜ்ரத் தௌஹீத், ஷிர்க் பற்றி உரையாற்றினார்கள். 
 “அல்லாவைத் தவிர யாரிடமும் கேட்க கூடாது என்பதல்ல தௌஹீத்.
அல்லாவைத் தவிர யாரிடமும் கேட்க முடியாது என்பதை உணர்வது தான் தௌஹீது” என்று.
0  0  0  0
எல்லாம் அவன். எல்லாம் அவன் செயல் என்பதல்ல இங்கே நான் கூற வருவது. மேலும் விளக்கம் வேண்டின் இந்த சுட்டியை பார்வையிடுங்கள்.


No comments: