ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Sunday, June 23, 2013
Saturday, June 15, 2013
நபியிடம் பெற்ற பேறு!
![]() |
ஷெய்குல் அரபி வல் அஜம் ஃபைஜிஷாஹ் நூரி(ரலி) |
வலிகள் கோமான் முஹய்யத்தீன் ஆண்டகையின் சரிதத்திலிருந்து பெரியோர்கள்
எடுத்துக் கூறிய ஒரு சம்பவம்:
கௌதுனா தன் சீடர்களுடன் ஆன்மீக சபையில் அமர்ந்திருக்கின்றார்கள். அப்போது
சீடர் ஒருவர் “ இப்போது நாம் அமர்ந்திருப்பது பெருமானாருடன் சஹாபாக்கள்
வீற்றிருப்பது போல் இருக்கிறது” என கூறவும் கௌதுனாவின் அழகிய முகம் சிவந்து விட்டது.
Monday, June 10, 2013
இறைகாதல் - கலாநிதி தீன்முகம்மதுவுடன் ஓர் நேர் காணல்
மப்றூக்

இவர் –
பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில்:
0 இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் – பீடாதிபதியாகவும்
0 மதங்கள் ஒப்பியல்துறைத்
தலைவராகவும்
0 கல்வி நிர்வாகப்
பணிப்பாளராகவும்
நீண்ட காலம் சேவையாற்றியிருக்கின்றார்.
அதற்கு முன்னர், 1988 இல் – எகிப்திலுள்ள அல் அஸ்ஹர்
பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றியிருந்தார்!
தற்போது கட்டார் பல்கலைக்கழகத்தின் சரீஆ கற்கைத்துறை
இணைப் பீடாதிபதியாக இருக்கின்றார். இந்தப் பதவிக்கு முன்னராக, இதே பல்கலைக்கழகத்தின் தவ்வா அல்
இஸ்லாமியக் கலாசாரத்துறை தலைவராகவும் கடமையாற்றினார்.
Tuesday, May 28, 2013
சிறுகதை - அதன் அகமும் புறமும் - சுந்தர ராமசாமி
தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து
மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப்
பயிலரங்கில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரை ( 25.03.95) நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும்
எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற
அவசியமும் கிடையாது.அப்படியொரு கட்டாயம்,
சமூகத் தேவை எதுவுமே இல்லை. சிறுகதை எழுதாமல் சிறந்த பிரஜையாக
வாழமுடியும். சிறுகதை எழுதுபவர்களைவிட, படிப்பவர்களைவிட
உயர்ந்த மனிதர்களாக அவர்கள் இருக்கவும் கூடும். சிலர் சிறுகதைகள் படிக்காமல் வேறு
அற்புதமான நூல்களைப் படித்திருப்பார்கள். சிலர் திருக்குறள் படித்திருப்பார்கள்.
சிலர் சிலப்பதிகாரம் படித்திருப்பார்கள். கம்பராமாயணம் படித்திருப்பார்கள். நமது
தலைவர் திரு. ஹமீத் அவர்களின் தகப்பனார் ஆன செய்க்குத்தம்பிப் பாவலர் இருக்கிறார்.
மிகப்பெரிய புலவர். இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரிய புலவர்களில் ஒருவர் என்று
சொல்லலாம். ஆனால் அவர் சிறுகதையை விரும்பிப் படித்திருப்பாரா என்பது சந்தேகம்
தான். அதை வைத்து ஒருவரை நாம் மதிப்பிட முடியாது.
Subscribe to:
Posts (Atom)