தோழமையுடன்

Wednesday, July 9, 2014

இறையச்சம் – வாழ்க்கை ஈஸியாகட்டும்! ‘வாழ்க்கை ஈஸியாக வேண்டுமா?’ என தங்கள் நிறுவன பொருளை உபயோகிக்க சொல்லும் வாசகங்களை பார்க்கின்றோம். அவைகள் எல்லாம் துளியளவே உண்மையைக் கொண்ட விளம்பர யுக்திகள். தேவைகளே உருவானவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லும் சாகச வார்த்தைகள்.தேவைகளே இல்லாத இறைவன் நம் வாழ்க்கை பயணம் இலேசாக ஓர் அற்புதமான வழியை காட்டியுள்ளான்.