தோழமையுடன்

Saturday, February 4, 2012

மனித வாழ்க்கையில் இனிமை சேர்த்தோரே யாரசூலுல்லா!

நன்றி: மெயில் ஆஃப் இஸ்லாம்


புகழனைத்தும் தனக்கே உரித்தான இறைவனால் புகழப்பட்டவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்).

இறைவனைப்போல அவன் படைப்புகளில் யாருமில்லை. அவன் படைத்த படைப்புகளில் நபிகளுக்கு இணையான சிருஷ்டியும் இல்லை.

'நபியை அல்லாஹ் என்று சொல்லக் கூடாது மற்றபடி எப்படி புகழ்ந்தாலும் அதில் தவறில்லை"என்பார்கள்  சங்கை மிகும் குருநாதர் ஃபைஜிஷாஹ்(ரஹ்) அவர்கள்.


"நம்பிக்கையாளர்களின் மீது அவர்களிடையே தூதுவரை அனுப்பியபோது பேருபகாரத்தை செய்துள்ளான்" என சொல்கிறது இறைவேதம் (3:164)

 அந்த விலைமதிக்க முடியாத இறையருட்கொடையை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கத் தெரிந்தவர்கள் சஹாபா பெருமக்கள் தான்.

 நபிநாதரை உயிரினும் மேலாய் நேசித்து அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தினை தங்கள் வாழ்வாக கொண்டவர்கள் நபியின் தோழர்கள்

அண்ணலாருடன் வாழ்ந்த ஒவ்வொரு நாளுமல்ல, ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு விலைமதிக்க முடியாஅருள்பேராக(ரஹ்மத்தாக)  உணர்ந்தவர்கள்.

எங்கள் தாயும், தந்தையும் உங்களுக்கு அர்பமாகட்டும் யாரசூலுல்லா!” என தங்களின் நெஞ்சம் நிறைந்த நேச உணர்வை வெளிப்படுத்தியவர்கள்.

தங்களின் தலைவரை இப்படியெல்லாம் கூட கொண்டாடுவார்களா என ஆச்சரியபடுத்தும் இந்த நபிமொழியை படியுங்கள். 

 தலையில் இருக்கும் வரை சீவிசிங்காரித்துவிட்டு உதிர்ந்துவிட்டால் குப்பைகூடைக்கு போகும் முடி என்ற அற்பப் பொருள் கூட முஹம்மது நபியின் சிரசிலிருந்து வந்தால்  அற்புதமாகும் வரலாற்றை பாருங்கள்:

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் கீழ்கானும் இக்காட்சியை பார்த்துக் கொண்டேயிருந்தேன். நபி(ஸல்) அவர்களில் சிரசிலிருந்து நாவிதர் முடியை எடுத்துக் கொண்டிருக்கிறார். கீழே விழும் முடியை பெற்றுக் கொள்வதற்காக தோழர்கள் வலம் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் திருமுடியும் கூட யாரேனும் ஒரு தோழரின் கரத்திலிருந்ததே தவிர தரையை தொடவில்லை. (நூல்: முஸ்லிம் ஷரீஃப்)

ஹலரத் உம்மு ஸல்மா(ரலி) அவர்களிடம் தாஹா நபி (ஸல்) அவர்களின் சில திருமுடிகளிருந்தன. யாருக்காவது கண்திருஷ்டியின் தொல்லையோ, அல்லது வியாதியின் சிரமமோ இருந்தால் அந்த திருமுடியை உம்மு சல்மா அவர்கள் சுத்தமான தண்ணீரில் முக்கி எடுத்து அதை நோயாளிக்கு குடிக்க கொடுப்பார்கள். அதனால் வியாதி குணமாகிவிடும். ( நூல் : புகாரி ஷரீஃப்)


o o o o o o

அஷ்ஷுஅரா’ (கவிஞர்கள்) எனும் அத்தியாயத்தின் விரிவுரையை நிறைவு செய்யும்போது, இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் ஒரு நபிவரலாற்று நிகழ்வைக் குறிப்பிடுகின்றார்கள்.  அண்ணல் நபி (ஸல்) அவர்களை வசை மொழிகளால் எதிரிகள் திட்டியபோது, தோழர் ஹஸ்ஸானைப் பார்த்து, “இவர்களுக்கு எதிராக வசைக்கவி பாடும்; ஜிப்ரீலும் உமக்குத் துணை நிற்பார்!என்று கூறி ஊக்கப் படுத்தினார்கள்.
(ஆதாரம்: சஹீஹுல் புகாரீ)

முகமும் முகவரியும் மறைத்த ஆயிரம் ஸல்மான் ருஸ்திகள் இணையத்தில் நபியின்மீதும் , அவர்களுக்கு வந்த வஹியின் மீதும் கூட திட்டமிட்டு வசைபாடும் இந்நாளின் நபியின் புகழ்பாட மீலாதுன் நபி என்ற ஒரு நாள் போதுமா?. 

நபிகள் நம்மோடிருக்கிறார்கள்….
நம் தொழுகையில்….
நம் நோன்பில்…
நம் தர்மத்தில்…..
நம் ஹஜ்ஜில்….
அவர்கள் வழிமுறையை பேணும் ஒவ்வொரு செயலிலும்
நபிகள் நம்மோடிருக்கிறார்கள்….

“என்னை நேசிப்பவர்கள் நபியை பின்பற்றுங்கள்” என்ற அல்லாஹ்,
“நபியே நீங்கள் அகப்பார்வையின் மீது இருகிறீர்கள்: உங்களை பின்பற்றியவர்களும்” என்றும் சொல்லிக்காட்டுகின்றான். 

அந்த அகப்பார்வையாளர்களோ இணைவைப்பைவிட்டு மீண்டவர்களாக அல்லாஹ்வையும், ரஸூலையும் தவிர நாங்களை அகக்கண்களால் எதையும் பார்க்கவில்லை. 'மாஃபி கல்பி கைருல்லாஹ்' என கவிதை பாடுகின்றார்கள்:

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா
மாஃபி கல்பி கைருல்லா
நூர் முஹம்மது ஸல்லல்லாஹ்
ஹக் லாயிலாஹ இல்லல்லாஹ்


மதீனா ஷரீஃபில் நபியின் புகழ்


கண்ணான கண்மனியே! கஸ்தூரி நாயகமே! - மர்ஹூம் ஷாஹுல் ஹமீது


எண்ணமெல்லாம் உங்கள் மீது நபியே! நபியே!  - தேரிழந்தூர் தாஜுதீன் ஃபைஜி


Post a Comment